தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உலக தேனீ தினம்: ‘தேனீ தாடி’ அமைத்து மாணவி சாகசம்

22 May 2026, 12:17 am
உலக தேனீ தினம்: ‘தேனீ தாடி’ அமைத்து மாணவி சாகசம்
<p><strong>உலக தேனீ தினம்: ‘தேனீ தாடி’ அமைத்து மாணவி சாகசம்</strong></p><p>​​​​​​​கோவை, மே 21- தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் உலக தேனீ தின விழாவில், மாணவி தனது முகம் முழுவதும் தேனீக்களைப் பரவச் செய்து ‘தேனீ தாடி’ அமைத்துக் காட்டினார். கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தின் பயிர் பாதுகாப்பு மையத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் பூச்சியியல் துறை சார்பில், உலக தேனீ தின விழா 2026 புதனன்று நடைபெற்றது. பூச்சியியல் துறை தலைவர் மா.முருகன் வரவேற்றார். புகழ்பெற்ற தேனீ வளர்ப்பாளர் ஆன்டன் ஜான் நினைவாக இந்த விழா நடத்தப்பட்டது. நம் அனை வரையும் தாங்கி நிற்கும் தேனீ கூட்டம் போல - மக்களுக்காகவும் புவிக்காகவும் தேனீக்களாய் ஒன்றி ணைவோம் என்ற நடப்பு ஆண்டின் கருப்பொருளை மையமாகக் கொண்டு இவ்விழா ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. இதில், பொதுமக்களுக்கு தேனீக்கள் மீதுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில், வேளாண் இறுதி ஆண்டு மாணவி சி. பாக்கிய லட்சுமி என்பவர், தனது முகம் முழு வதும் தேனீக்களை பரவ செய்து ‘தேனீ தாடி’ அமைத்துக் காட்டி னார். இந்த சாகசம் விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்களைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. நான்காமாண்டு வேளாண் இளமறி வியல் மாணவர்கள் தங்களது வணிகரீதியில் தேனீ வளர்ப்பு பாடத் திட்டத்தின் கீழ் தயாரித்த பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட தேனீ பொருட் களைக் காட்சிப்படுத்தியிருந்தனர். மணமூட்டப்பட்ட தேன், தேன் சோப்பு, உதட்டு களிம்பு, பாத வெடிப்பு களிம்பு, குமிழ், கிண்ண மற்றும் மலர் வடிவ மெழுகுவர்த்தி கள் உள்ளிட்ட பொருட்களை பல் கலைக்கழகத்தின் செயல் துணை வேந்தர் கா.சுப்பிரமணியன் திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந் தினராக பங்கேற்று தலைமையுரை ஆற்றிய செயல் துணை வேந்தர், உலக தேனீ தினத்தின் வரலாறு, தேனீக்களுக்கும் மலர்களுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் பிணைப்பு மற்றும் சுற்றுச்சூழலில் தேனீக்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். பயிர் பாதுகாப்பு மைய இயக்கு நர் முனைவர் மூ. சாந்தி தனது சிறப்புரையில், தேனீக்களின் வியக் கத்தக்க செயல்பாடுகளை விளக்கி னார். மேலும், தமிழ்நாட்டின் முன் னோடி தேனீ வளர்ப்பாளர்களான ஆனந்த் மற்றும் சந்தோஷ் ஆகி யோர் கலந்துகொண்டு, தேனீ வளர்ப்பில் தங்களுக்குள்ள கள அனுபவங்களை பகிர்ந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.