ஆபத்தான பணிகளில் பெண்களை அனுமதிக்கக் கூடாது உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஆர்ப்பாட்டம்
29 Nov 2025, 4:58 pm
<p><strong>ஆபத்தான பணிகளில் பெண்களை அனுமதிக்கக் கூடாது உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, நவ.29- ஆபத்தான பணிகளில் பெண்களை அனு மதிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப் பை கண்டித்து சிஐடியு உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சனி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, ஆபத்தான தொழில்களில் பெண் தொழிலாளர்களை அனுமதிப்பது மற்றும் பெண்களிடம் ஒப்பு தல் பெற்று இரவு நேர பணிகளிலும் ஈடுபடு வதற்கான திருத்தம் முன்மொழிந்துள்ளது. ஆபத்தான தொழில்களில் பெண்களை அனு மதிப்பதால் கல்வி உரிமை, வேலை உரிமை பறிபோகும் அபாயமும், உடல் ரீதியாக மட்டு மல்லாமல் மனரீதியாகவும், பாதிக்கப்படு வார்கள். பெண்களுக்கு பாதுகாப்பின்மை, பாலியல் துன்புறுத்தல், ஆபத்தான பணிக ளில் ஈடுபடும் போது உடல் இயல்பான சுழற்சி யை மாற்றுவதால் உடல்நல குறைவு, மன அழுத்தம், புற்றுநோய், மாதவிடாய் பிரச் சனை, கல்லீரல் பாதிப்பு, மகப்பேறு பிரச் சனை, குழந்தை பிறப்பு தடைபடுதல், குழந் தை பிறந்தாலும் குறைபாடுகளுடன் பிறக் கும் சூழல் இப்படி பல பிரச்சனைகள் அபாய கரமான தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் என்பதால் பெண்களே விருப்பம் தெரிவித்தால் அனுமதிக்கலாம் என்ற அர சின் அறிவிப்பால் வறுமை நிலையில் உள்ள குடும்பங்கள் ஆபத்தான பணிகளுக்கு தயா ராகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே பெண்கள் விருப்பம் தெரிவித்தா லும் இது போன்ற அபாயகரமான பணிக ளில் பெண்களை ஈடுபடுத்தாமல் இருப்பது அரசின் கடமையாகும். தமிழ்நாடு நலன் மற் றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு தொழிற்சாலை விதிகள் (1950) திருத்தம் தமி ழக அரசு மேற்கொண்டால் 20க்கும் மேற்பட்ட ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தும் கட்டாயத்திற்கு பெண்கள் ஆளாக்கப்படு வார்கள் இதனால் பெண்களின் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் பாதுகாப்பின்மையால் பாதிப்புக்குள்ளாக் கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு, ஆபத்தான பணிகளில் பெண்களை அனு மதிக்கலாம் என்கிற அறிவிப்பை திரும் பப்பெற வலியுறுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட கன்வீனர் சி. கவிதா தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாகராசன், மாவட்டத் தலைவர் சி.கலாவதி, இணைச்செயலா ளர்கள் லில்லி புஷ்பம், ராஜம்பாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் கண்மணி நன்றி கூறினார்.</p>
