கரும்பு அரவையை துவங்காத சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் தர்ணா
17 Dec 2025, 4:11 pm
<p><strong>கரும்பு அரவையை துவங்காத சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் தர்ணா</strong></p>
<p>தருமபுரி, டிச.17- கரும்பு அரவையை துவங்காத பாலக்கோடு சர்க்கரை ஆலை நிர் வாகத்தை கண்டித்து தொழிலா ளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோட்டில் தருமபுரி மாவட்ட கூட்டு றவு சர்க்கரை ஆலை இயங்கி வரு கிறது, கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆலை, தமி ழகத்திலேயே அதிகளவில் சர்க்கரை உற்பத்தி திறன் பெற்ற சிறந்த ஆலை என பெயர் பெற்றது. ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் டன் கரும்பை தொடர்ந்து 9 மாதங்கள் அரவை செய்து சாதனை படைத்த இந்த சர்க்கரை ஆலை, நாளடை வில் இதன் செயல்திறன் படிப்படி யாக குறைந்து வருடத்திற்கு 50 ஆயிரம் டன் கரும்பு கூட அரவை செய்ய முடியாமல் உள்ளது. பெளர ளவிற்கு ஓரிரு நாட்கள் மட்டும் அரவை தொடங்கி, தொடங்கிய வேகத்திலேயே மூடப்பட்டு வருகி றது. இதனால், இந்த சர்க்கரை ஆலையை நம்பியுள்ள தொழிலா ளர்கள், விவசாயிகள், லாரி ஓட்டு நர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள னர். நிர்வாக அதிகாரிகள் ஆலைக்கு தேவையான கரும்பை விவசாயிகளிடம் பதிவு செய்வ தில்லை. விவசாயிகளுக்கு விதை கரும்புகளை வழங்குவதில்லை. கொள்முதல் செய்யும் கரும்பிற் கான பணத்தை உரிய காலத்தில் வழங்குவதில்லை. விவசாயிகள் விளைவித்த கரும்பை 10 மாதத்தில் அறுவடை செய்யாமல், பூ எடுத்து கரும்பு காய்ந்த பின்னரே கொள் முதல் செய்வதால் கருப்பு எடை குறைந்து விவசாயிகள் நஷ்டமடை கின்றனர். மேலும், அடிக்கடி இயந் திர கோளாறுகள் ஏற்பட்டு அரவை நிறுத்தப்படுவதும், வெல்லபாகு வெளியேறி நட்டம் ஏற்படுவது என நிர்வாகம் திறன் செயலற்று போன தால். புகழ் பெற்ற இந்த சர்க்கரை ஆலை மூடு விழா காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் டிச.19 ஆம் தேதி அரவை பணி தொடங்கப்படும் என அறிவிக் கப்பட்ட நிலையில், திடீரென அதி காரிகள் 30 ஆயிரம் டன் கரும்பு மட்டுமே உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 1800 டன் கரும்பு தேவைப்படும் நிலையில் 30 ஆயிரம் டன் அரவை தொடங்கி னால் 2 வாரங்கள் கூட ஆலை இயங்க முடியாது. முழுமையான கரும்பு இல்லாமல் அரவையை தொடங்கினால் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்ப தால், கரும்பு அரவையை பெயரள வில் தொடங்கிவிட்டு சத்தம் இல்லா மல் மூடிவிட்டு அனைத்து கரும்பு களையும் அரூர் சுப்ரமணிய சிவா சர்க்கரை ஆலைக்கு அனுப்ப திட்ட மிட்டுள்ளனர். இதனையறிந்த 100க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் ஆலையை மூடாதே, செயலற்ற நிர்வாகமே பதவி விலகு என கோஷமிட்டு உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதனை அதிகாரிகள் பொருட் படுத்தாமல் அலட்சியபடுத்திய தால், தொழிலாளர்கள் சர்க்கரை ஆலை வெளியே வாயில் முன்பு அமர்ந்து நிர்வாகத்தை கண்டித்து புதனன்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>
