முந்தய பக்கம்

அசோக் லேலண்ட் ஆலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

27 Nov 2025, 3:11 pm
அசோக் லேலண்ட் ஆலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p>தொழிலாளர் நலச் சட்டங்கள் 4 தொகுப்புகளாக மாற்றி, தொழிலாளர் உரிமைகளை முற்றிலும் ஒழித்துக்கட்டும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து, இன்று (நவ. 27) ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் ஆலைகளின் கிளைகள் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் அசோக் லேலண்ட் யூனிட் 2 வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் ராஜேஷ், செல்வம், சேக் அப்துல் ரகுமான் பாரி, துணைச் செயலாளர்கள் பாலமுருகன், ரவிக்குமார், சாதிக் பாட்ஷா, சிஐடியு அணி செயலாளர் தரணியன், மாவட்ட துணைத் தலைவர் மாதவன் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் இந்தக் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram