தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுத்துறையில் பெருகும் ஒப்பந்த முறையை எதிர்த்து தொழிலாளர்கள் கிளர்ந்தெழ வேண்டும்!

25 Jan 2026, 4:16 pm
பொதுத்துறையில் பெருகும் ஒப்பந்த முறையை எதிர்த்து தொழிலாளர்கள் கிளர்ந்தெழ வேண்டும்!
<p><strong>பொதுத்துறையில் பெருகும் ஒப்பந்த முறையை எதிர்த்து தொழிலாளர்கள் கிளர்ந்தெழ வேண்டும்!</strong></p> <p>சென்னை மாநாட்டில் அ. சவுந்தரராசன் முழக்கம்! சென்னை, ஜன. 25: &nbsp;பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தரப் பணியிடங்களைக் குறைத்து, ஒப்பந்த முறையை அதிகரித்து உழை ப்பைச் சுரண்டுவதைக் கண்டித்தும், &lsquo;சம வேலைக்கு சம ஊதியம்&rsquo; என்பதை உறுதிப்படுத்தக் கோரியும் ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் சென்னை &nbsp;பெரம்பூரில் ஞாயிறன்று (ஜன. 25) &nbsp;மாபெரும் மாநாட்டினை நடத்தினர். &nbsp;ரயில்வே காண்ட்ராக்ட் தொழிலாளர் களின் 4-ஆவது மாநில மாநாட்டிற்கு டிஆர்இயூ (DREU) தலைவர் ஜி. சுகுமாறன் தலைமை தாங்கினார். ஜி. சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். எஸ். ராஜா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். &nbsp;சட்டத்தின் ஆட்சி என்பது தொழிலாளர் நீதியே! மாநாட்டைத் தொடக்கி வைத்து சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் &nbsp;அ. சவுந்தரராசன் ஆற்றிய உரை தொழிலாளர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. இன்றைய சூழலில் அவுட் சோர்சிங், அப்ரண்டிஸ் எனப் பல்வேறு முகமூடிகளுடன் தொழிலாளர்களின் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்படு வதாக அவர் குற்றம்சாட்டினார். வரை யறுக்கப்பட்ட சட்டகத்திற்குள் நடப்பதே &lsquo;சட்டத்தின் ஆட்சி&rsquo; என்று &nbsp;கூறப்படும் நிலையில், கோடிக்கணக் கான உழைப்பாளர்களுக்குச் சட்டப்படி யான நீதி கிடைக்காததைச் சுட்டிக்காட்டிய அவர், இதை உண்மையான சட்டத்தின் ஆட்சி என்று ஏற்க முடியாது என்றார். தொழிற்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே உண வில் கூடப் பாகுபாடு காட்டப்படும் அவ லத்தைச் சாடிய அவர், சிஐடியு போன்ற சங்கங்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே இந்தப் பாகுபாடுகள் தகர்க்கப் படுவதாகக் குறிப்பிட்டார். 70 முதல் 80 சதவீத ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், மிகப்பெரிய முதலாளிகளும் பணிய வேண்டிய சூழல் ஏற்படும் என்பதற்கு வல்லூர் அனல் மின் நிலையப் போராட்டமே சாட்சி என்றும் அவர் நினைவூட்டினார். இடைத்தரகர்களே ஒப்பந்ததாரர்கள்; ரயில்வேயே முதலாளி! தொடர்ந்து பேசிய அ. சவுந்தரராசன், ரயில்வே, பிஎச்இஎல், நெய்வேலி போன்ற பொதுத்துறை நிறுவனங்களே முதன்மையான முதலாளிகள் என்றும், &nbsp;ஒப்பந்ததாரர்கள் என்பவர்கள் தொழி லாளர்களின் கூலியில் கமிஷன் அடிக்கும் இடைத்தரகர்களே என்றும் விளக்கிப் பேசினார். நிரந்தரத் தன்மை கொண்ட பணிகளில் ஒப்பந்தத் தொழி லாளர்களை ஈடுபடுத்துவது சட்ட விரோத மானது என்று குறிப்பிட்ட அவர், நீதி மற்றும் தர்மம் மட்டும் உரிமைகளைத் தந்துவிடாது என்பதால், 8 மணி நேர &nbsp;வேலைக்காகப் போராடிய முன்னோர் களின் துணிவோடும் வலிமையோடும் ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டும் என அறை கூவல் விடுத்தார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல் மாநாட்டின் நிறைவுரையை சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் கே. ஹேமலதா ஆற்றினார். ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், பெண் தொழி லாளர்களின் பாதுகாப்புக்காகவும் அகில இந்திய அளவில் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். டிஆர்இயூ செயல் தலைவர் அ. ஜானகிராமன், பொதுச்செயலாளர் எம்.எம். பேபி ஷகிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயலாளர் ஜி. மதியழகன் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஆர்.சரவணன் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். தீர்மானங்கள் ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, நிரந்தரத்தன்மை உள்ள வேலைகளில் ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு &lsquo;சம வேலைக்கு சம ஊதியம்&rsquo; வழங்கப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி அகவிலைப்படியுடன் கூடிய ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இ.பி.எப் (EPF) மற்றும் இ.எஸ்.ஐ (ESI) பிடிப்பதை ரயில்வே நிர்வாகம் உத்தரவாதப்படுத்துவதோடு, ரயில்வே மருத்துவமனைகளில் தொழிலாளர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர்களின் பணிப்பாது காப்பை உறுதி செய்யும் வகையில், ஒரு டெண்டர் முடிந்து அடுத்த டெண்டர் வரும்போது, ஏற்கனவே அனுபவம் வாய்ந்த பழைய தொழிலாளர்களையே மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற நிபந்தனையை ரயில்வே வாரியம் ஒப்பந்தத்தில் கொண்டு வர வேண்டும் என மாநாடு வலியுறுத்தியது. மேலும், பெண் தொழிலாளர்களுக்குக் குடிநீர், கழிவறை, உடை மாற்றும் அறை மற்றும் குளிப்பதற்கான வசதிகளை அந்தந்த டிவிசன் நிர்வாகங்களே நேரடியாகச் செய்து தர வேண்டும் என்றும், ஒப்பந்தத் &nbsp;தொழிலாளர்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பணிக்கொடை, போனஸ் மற்றும் குறைந்த கட்டணத்தில் ரயில்வே பாஸ் வழங்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. &nbsp;புதிய நிர்வாகிகள் மாநாட்டின் நிறைவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கௌரவத் தலைவராக ஜி. சுகுமாறன், தலைவராக அ. ஜானகிராமன், செயல் தலைவராக ஆர். சரவணன், பொதுச்செயலாளராக பா. ராஜாராமன், பொருளாளராக ஜி. சிவக்குமார், இணைப் பொதுச்செயலாளர்களாக ஜி. மதியழகன், என்.வி. கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 48 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. நிகழ்வின் நிறைவாக பா. ராஜாராமன் நன்றி கூறினார். (ந.நி.)</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.