100 நாள் வேலைத்திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் தர்ணா
16 May 2026, 1:54 am
<p><strong>100 நாள் வேலைத்திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் தர்ணா</strong></p><p>ராணிப்பேட்டை, மே 15 – மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், கருவிழி ஸ்கேன் செய்யும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று (மே. 15) தர்ணா போராட்டம் நடைபெற்றது. நெமிலி ஒன்றியம், நாகவேடு கிராம ஊராட்சி அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்தத் தர்ணா போராட் டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் என். குணசங்கரன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். காசிநாதன், தாலுகா செயலாளர் ஆர். வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர் ஏபிஎம். சீனி வாசன் ஆகியோர் பேசினர். விதொச நிர்வாகிகள் கே. சிவகுமார், மாயவன் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் தொழிலாளர்களும் இப்போராட்ட தில் திரளாகக் கலந்து கொண்டனர். போராட்டத்தின் இறுதியாக, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி அலுவலரிடம் நிர்வாகிகள் வழங்கினர். மருதாலம், கொளத்தேரி, வேலம் ஆகிய ஊராட்சி அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் வ. வேலு தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. சந்திரன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ராமமூர்த்தி உட்பட நூற்றுக்கணக்கான விவசாய தொழி லாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.</p>
