தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வம்

22 Mar 2026, 4:19 pm
மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வம்
<p><strong>மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வம்</strong></p> <p>திருவள்ளூர், மார்ச் 22 - சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக திருவள்ளூரில் மண் அடுப்பு தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தங்களுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். &nbsp;ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, சில ஓட்டல்கள் மூடும் நிலைக்கு வந்துள்ளன. மேலும், வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளில் சமைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், மக்கள் மண் அடுப்புக்கு திரும்பி உள்ளனர். திருவள்ளூரில், இருப்பு வைத்திருந்த மண் அடுப்புகளும் விற்று தீர்ந்துவிட்டன. இதனால் திருவள்ளூரை அடுத்த மேலானூர் பகுதியில் மண் அடுப்பு தயாரிக்கும் தொழில் தீவிரம் அடைந்துள்ளது. அதிகளவில் ஆர்டர் தர முன் வந்திருப்பதால் மண் அடுப்பு தயாரிக்கும் பணி அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் மண் அடுப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. &nbsp;தற்போது, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தாலும் மண் அடுப்பு விலை ஏற்றம் தற்போது வரை இல்லை என்றும், ஒரு அடுப்பு ரூ.80 முதல் ரூ.100 அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மண்பாண்டம் தொழில் செய்யும் தங்களுக்கு அரசு வங்கிக் கடன் அளித்து உதவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.