முந்தய பக்கம்

சங்கரன்கோவிலில் ரூ.40.50 இலட்சத்தில் உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு

4 Mar 2026, 5:01 pm
சங்கரன்கோவிலில் ரூ.40.50 இலட்சத்தில்  உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு
<p><strong>சங்கரன்கோவிலில் ரூ.40.50 இலட்சத்தில் &nbsp;உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு</strong></p> <p>தென்காசி, மார்ச் 4- &nbsp;தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அம்பேத்கர் நகரில் புதியதாக ரூ.40.50 இலட்சம் மதிப்பீட்டில் &nbsp;உழைப்பாளர் நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. &nbsp;தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மார்ச் 4 புதனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் &nbsp;சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைத்தார். சங்கரன்கோவிலில் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பி னர் மரு. ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 10 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1,63,600 மதிப்பி லான கல்வி உதவித் தொகை, திருமண உத வித் தொகை, இயற்கை மரண உத வித்தொகை, ஓய்வூதியத்திற்கான உத வித்தொகை மற்றும் தொழிலாளர் நல அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்நிகழ்வில், சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் கௌசல்யா, தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் (ச.பா.தி) ஜெனிபர் மற்றும் அரசு அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram