தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் உரிமை பாதிக்கப்படக் கூடாது!

29 Nov 2025, 4:58 pm
தொழிலாளர் உரிமை பாதிக்கப்படக் கூடாது!
<p><strong>தொழிலாளர் உரிமை பாதிக்கப்படக் கூடாது!</strong></p> <p>திமுக எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, நவ.29 - ஒன்றிய பாஜக அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை &nbsp;பாதிக்கப்படக் கூடாது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.,க்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை யொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் சனிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எம்.பி.,க்களிடம் பணி அறிக்கை பெறப்படும் &nbsp;என அறிவிக்கப்பட்டது. அத்துடன், மாநில உரிமை களை மதிக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. &nbsp;தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை - அவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் &ldquo;நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை&rdquo; கொண்டு &nbsp;வந்துள்ளதையும், நாட்டிலேயே மிகச்சிறந்த தொழி லாளர் நலன் காக்கும் அமைப்புசாரா நலவாரியங் களை உருவாக்கியுள்ள தமிழ்நாட்டின் தொழிலாளர் &nbsp;நலத் திட்டங்களை முடக்கும் வகையில் அமைந்துள் ளதையும், நம் மாநிலத்தில் உள்ள அமைப்பு சாரா &nbsp;நலச் சட்டமே தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் என்ற நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைத்த கருத்துகளை ஏற்று இதுவரை விலக்கு அளிக் காமலும் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக் கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், தொழி லாளர் நலச் சட்டத் தொகுப்புகள் ஒவ்வொரு மாநிலத்தி லும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளை, நலன் களைப் பாதிக்கக் கூடாது. ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காமல் நிராகரிப்பது, &nbsp;செஸ் வசூல் செய்து மாநிலத்திற்கு அளிக்காதது, நிதி &nbsp;ஆணைய ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ கம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. புதிய வழித்தடத் திற்கு ரூ.31,450 கோடி ஒதுக்கப்பட்டும் தெற்கு ரயில்வேக்கு வெறும் ரூ.301 கோடி மட்டுமே வழங்கப் பட்டது. பிரதமர் மோடி நேரில் தலையிட்டு கோவை, &nbsp;மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முதலமைச்சர் இருமுறை பிரதமரிடம் நேரில் &nbsp;கோரிக்கை வைத்தும், மக்கள்தொகை அளவுகோல் காட்டி மறுக்கப்படுகிறது. கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டத் திற்கு அனுமதி வழங்க வேண்டும். கருணாநிதி பல்கலைக்கழக சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் &nbsp;ஒப்புதல் அளிக்க வேண்டும். மே 2 ஆம் தேதி &nbsp;ஆளுநருக்கு அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவை குடி யரசுத் தலைவருக்கு அனுப்பி தாமதப்படுத்துவதாக ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டது. செறிவூட்டப்பட்ட &nbsp;அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளை பாதுகாக்க &nbsp;முதலமைச்சர் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டும். நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத் தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். &nbsp;3548.22 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா கல்வி திட்ட &nbsp;நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு &nbsp;நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இந்திய மீனவர்களின் &nbsp;பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்கவும், &nbsp;கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை &nbsp;விரைவாக விடுவிக்கவும், நிரந்தர தீர்வும் காண &nbsp;வேண்டும். 247 படகுகள்பறிமுதல் செய்யப்பட்டும், &nbsp;96 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். 23.8.2010-க்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் பணி மற்றும் பதவி உயர்வை பாதுகாக்க தேவையான சட்ட திருத்தங்கள் கொண்டு &nbsp;வர வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு &nbsp;திட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும். பொருட் கூறு செலவினத்திற்கு ரூ.1290 கோடி வழங்கவும், 30 &nbsp;கோடி மனித நாட்களுக்கான அனுமதி ஆணை வழங்கவும் வேண்டும். இந்த தீர்மானங்கள் அனைத்தும் வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்களால் &nbsp;எழுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.