தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலை வழங்கக் கோரி நிறுவனத்திற்குள் சங்கம் துவக்கிய தொழிலாளர் குடும்பத்தினர் கைது

27 Mar 2026, 3:15 pm
வேலை வழங்கக் கோரி நிறுவனத்திற்குள் சங்கம் துவக்கிய தொழிலாளர் குடும்பத்தினர் கைது
<p><strong>வேலை வழங்கக் கோரி நிறுவனத்திற்குள் சங்கம் துவக்கிய தொழிலாளர் குடும்பத்தினர் கைது</strong></p> <p>காஞ்சிபுரம், மார்ச் 27- காஞ்சிபுரம் மாவட்டம், நீர்வல்லூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் &nbsp;நிறுவனத்தில் வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி, அவர்க ளது குடும்பத்தினருடன் நிறுவனத்திற்குள் போராட்டம் நடத்தியதால் &nbsp;பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர் உரிமைகளுக்காக சிஐடியு சங்கம் அமைக்க முயற்சி செய்த போது, நிர்வாகம் அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரித் தொழிலாளர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களையும், உண்ணா நிலையங்களையும் நடத்தி வந்தனர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வேலை இன்றி வருமானம் பாதித்ததால், வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர் குடும்பத்தினர், &quot;நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை&quot; எனச் சங்க அலு வலகத்தில் முறையிட்டுள்ளனர். இதன் அடிப்படையில், வெள்ளியன்று (மார்ச் 27) தொழிலாளர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கம்பெனி வளாகத்திற்குள் சென்று அமிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக் கைது செய்து தனியார் திருமண மண்ட பத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டுப் பாதிக்கப் பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கிட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காஞ்சிபுரம் சிஐடியு மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.