ஏ.டி.எம்.இல் விட்டுச் சென்ற பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி
14 May 2026, 11:39 pm
<p><strong>ஏ.டி.எம்.இல் விட்டுச் சென்ற பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி</strong></p><p>நாமக்கல், மே 14- குமாரபாளையம் ஏ.டி.எம்.இல் விட்டுச் சென்ற பணத்தை கூலித்தொழிலாளி குமார பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், பலரும் அவரை பாராட்டி வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலை ஸ்டேட் வங்கியில் மே. 11 இரவு 07:10 மணியளவில் உள்ள ஏ.டி.எம். இல், பணம் எடுக்க வந்த ஒருவர், மெசினில் பணம் வரவில்லை என வெளியில் சென்றுள்ளார். அவருக்கு பின் குமாரபாளையம் அம்மன் நகரில் வசிக்கும் சீனிவாசன், அந்த ஏ.டி.எம். சென்டருக்கு போனார். அங்குள்ள மெசினில் பணம் மூவாயிரம் இருந்துள்ளது. இதனை கண்ட சீனிவாசன், அந்த தொகையை, குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று, அங்கிருந்த எஸ்.ஐ., மாதேஸ்வரன் வசம் ஒப்படைத்தனர். இது குறித்து அனைத்து வாட்ஸ் அப் குரூப்களில் தகவல்கள் பகிர்ந்தனர். இதுவரை யாரும் அந்த பணத்தை பெற வரவில்லை. ஏ.டி.எம். மெசினில் இருந்த பணத்தை கொண்டு வந்து கொடுத்த சீனிவாசன், அவரது மனைவி கற்ப கம் ஆகியோரை குமாரபாளையம் போலீ சார் உள்பட பலரும் பாராட்டினர்.</p>
