கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
31 Dec 2025, 3:37 pm

தொழிலாளி கொலை - 2 பேர் கைது

கோவை, டிச.31- கோவையில் மேற்குவங்கத்தை சேர்ந்த தொழிலாளியை அடித்துக் கொன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ் (22). இவர் கோவையில் தங்கி தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுராஜ் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே தனது நண்பர் ராகெத் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பய ணிகள் ஆட்டோவை ஓட்டி வந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த பஜித்கான் (30). வேகமாக வந்து சுராஜ் மீது மோதி யுள்ளார். இதில் கீழே விழுந்த சுராஜ் லேசான காய மடைந்தார். பின்னர் இது குறித்து சுராஜ், பஜித்கானிடம் கேட்ட போது இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பஜித்கானின் நண்பரான பிரகாஷ் என்பவருடன் சேர்ந்து சுராஜ் மற்றும் ராகெத்தை மிரட்டியுள்ளனர். மேலும் அப்போது சுராஜை மன்னிப்பு கேட்க வேண்டும் பஜித்கான் கூறியுள் ளார். ஆனால் தன் மீது தவறு இல்லை, மன்னிப்பு கேட்க முடி யாது என சுராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பஜித்கான் சுராஜை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி சுராஜ் விழுந்த நிலையில் பஜித்கான், பிரகாஷ் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும் சுராஜை தாக்குவது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவரது நண்பர் ராகெத் சென்ற நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் சுராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுராஜ் மறு நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து பஜித்கான் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்த னர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி

ஈரோடு, டிச.31- நிதி நிறுவனம் மூலம் 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் புகாரளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் கார்த்தி என்பவர் 2013 முதல் டி.ஆர்.சிட் பண்ட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிறுவனத்தில் 350 பேர் மாதாந்திர சீட்டாக ரூ.5 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை தவணையாக செலுத்தியுள்ள னர். இந்நிலையில், 6 மாதமாக முதிர்வு தொகையை தராமல் காலம் தாழ்த்திய கார்த்தி, 2 மாதங்களுக்கு முன் தப்பியோடி விட்டார். இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகாரளித்தனர். இதன் மீது எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பாதிக்கப்பட்டோர், புத னன்று கருங்கல்பாளையத்திலுள்ள பொரு ளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.