சாலை விபத்தில் தொழிலாளி பலி
25 Nov 2025, 3:29 pm
<p><strong>சாலை விபத்தில் தொழிலாளி பலி</strong></p>
<p>தருமபுரி, நவ.25- தருமபுரி அருகே கார் மோதியதில், இருசக்கர வாக னத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமாா் (48). இவர் தருமபுரி பகுதியிலுள்ள தேநீர் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். செம்மனஅள்ளி பேருந்து நிலையம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் எதிா்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கடத்தூர் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள், சசிகுமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.</p>
