கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
18 Jan 2026, 4:50 pm

தருமபுரியில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி, ஜன.18- பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் இரவு காவலுக்குச் சென்ற தொழிலாளி யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தபாடி ஊராட்சிக்குட் பட்ட கே.குள்ளாத்திரம்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் மகாராஜன் (64). இவர், அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சொந்தமான மானிய நிலத் தில் விவசாயப் பணியினை மேற் கொண்டு வருகிறார். இந்நிலையில், மகாராஜன் இரவு நேர காவலுக்காக சனி யன்று இரவு சென்றுள்ளார். நிலத்தில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான குடி லில் தங்கியுள்ளார். அப்போது, பென்னாகரம் வனப்பகுதிக்குட்பட்ட பேவனூர் பீட் நிர்வாக எல்லை எனும் இடத்தில் வனப்பகுதியிலிருந்து வெளி யேறிய குட்டியுடன் கூடிய இரண்டு யானைகள் கூத்தப்பாடி கிராமத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளது. பொங்கல் விழாவையொட்டி பட்டாசு வெடித்த தன் காரணமாக, யானைகள் அங்கி ருந்து விவசாய நிலத்திற்குள் நுழைந்து குடிலில் தங்கியிருந்த விவசாயியை தாக்கியுள்ளது. இதில் மகாராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் பாபு சுரேஷ் குமார் (பென்னாகரம்), முரளி (ஒகேனக்கல்) உள்ளிட்ட போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒகே னக்கல் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது. தற்பொழுது கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி, தேன்கனிக் கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளி லிருந்து நூற்றுக்கணக்கான யானை கள் ஒகேனக்கல், தாசம்பட்டி, போடூர், சின்னாறு ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளன. ஒகேனக்கல் வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால், யானை கள் உணவு இல்லாமல் காடுகளிலி ருந்து வெளியேறி வருவது வாடிக்கை யாகிவிட்டது. எனவே, வனத்துறையி னர் காடுகளை ஒட்டியுள்ள மக்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் - சென்னை இடையே விரைவில் கூடுதல் விமானம்: அதிகாரிகள் தகவல்சேலம், ஜன.18- சேலம் - சென்னை இடையே கூடு தல் விமானம் சேவை விரைவில் அம லுக்கு வரவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து உதான் திட்டத்தின் கீழ், பெங்களூரு, ஐதரா பாத், கொச்சி ஆகிய 3 நகரங்களுக்கு இண்டிகோ, அலையன்ஸ் ஏர் நிறு வனங்கள் விமானங்களை இயக்கி வரு கின்றன. மேலும், உதான் திட்டமில்லா மல் சேலம் - சென்னை இடையே தின சரி விமான சேவையை இண்டிகோ நிறு வனம் வழங்கி வருகிறது. 4 முக்கிய நகரங்களுக்கு சேலத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுவதால், தின மும் குறைந்தது 300 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற் போது சேலம் -சென்னை இண்டிகோ விமானம், மாலை 3.20 மணிக்கு புறப் பட்டுச் செல்கிறது. மறுமார்க்கத்தில் சென்னையிலிருந்து சேலத்திற்கு மாலை 5.30 மணிக்கு விமானம் வந்து சேர் கிறது. இந்நிலையில், சேலம் - சென்னை இடையே காலை நேரத்தில் விமான சேவை வழங்க கேரளாவை தலைமையிடமாக கொண்ட அல்ஹிண்ட் ஏர் நிறுவனம், ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறையை நாடியது. இதுகுறித்து விமான நிலைய அதி காரிகள் கூறுகையில், ‘சேலம் - சென்னை இடையே தற்போது இண்டிகோ நிறுவனம் ஒரு விமானத்தை இயக்கி வருகிறது. தற்போது அல் ஹிண்ட் ஏர் நிறுவனம் மேலும் ஒரு விமானத்தை சேலம் - சென்னை இடையே இயக்க அனுமதி பெற்றி ருக்கிறது. இந்த புதிய விமான சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சேலம் மட்டுமின்றி சுற்றியுள்ள நாமக் கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட தொழிலதிபர்கள், வியாபாரி கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு இந்த விமானம் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறோம், என்றனர்.

எருதாட்டம்: சேலத்தில் 4 பேர் பலி; பென்னாகரத்தில் 5 பேர் படுகாயம்

தருமபுரி, ஜன.18- காணும் பொங்கலையொட்டி நடைபெற்ற எருதாட்டத்தில் சேலத் தில் 4 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் அருகே உள்ள கரியம்பட்டி பட் டாளம்மன் கோவில் வளாகத்தில் சனியன்று நடைபெற்ற எருதாட்டத் தில் கொட்டாவூர், கரியம்பட்டி, நாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளி லிருந்து 5க்கும் மேற்பட்ட காளை கள் கொண்டு வரப்பட்டன. மேள தாளத்துடன் தலா 3 சுற்றுகள் வீதம் காளைகளை வடக்கயிற்றை கொண்டு இருபுறங்களிலும் கட்டி யவாறு இளைஞர்கள் இழுத்துச் சென்றனர். அப்போது காளைக ளுக்கு முன் பொம்மைகள், துணி களைக் காட்டியபோது இளை ஞர்களை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தன. இதேபோல கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட கே.அக்ரஹா ரம் பகுதியில் நடைபெற்ற எரு தாட்டத்திற்கு மடம், கே. அக்ரஹா ரம், அளேபுரம், கே.குள்ளாத்திரம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. மாங்கரை பகுதியில் நடைபெற்ற எருதாட்டத்திற்கு வண்ணாத்திப்பட்டி, மாங்கரை, புள்ளப்பட்டி, மோட்டுப்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் இருந்து காளை கள் கொண்டு வரப்பட்டன. பென் னாகரம் பகுதிகளில் நடைபெற்ற எருதாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. எருதாட்ட நிகழ்வில் பங்கேற்று காளைகளை இழுத்துச் சென்ற 5க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாய மடைந்தனர். இவர்கள் சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர். சேலத்தில் 4 பேர் உயிரிழப்பு சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டியில் ஊருக்கு வெளியே காட்டுப்பகுதி யில் மஞ்சுவிரட்டு போட்டி சனி யன்று நடைபெற்றது. இதனை வேடிக்கை பார்த்த செந்தாரப்பட்டி பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த சின்னதம்பி மகன் சக்தி வேல் (24) மாடு முட்டி உயிரிழந் தார். இதேபோல், தம்மம்பட்டி கொண்டையம்பள்ளி மாரியம்மன் கோவில் திடலில் நடந்த எருதாட் டத்தை வேடிக்கை பார்த்த ஜெக தீஷ் என்பவரின் மனைவி வினிதா (30), காளை முட்டி உயிரிழந்தார். மேச்சேரி அடுத்த புக்கம்பட்டியில் எருதாட்டத்தில் காளை முட்டி விவ சாயி ராஜ்குமாரும் (58), ஆத்தூர் அருகே கீரிப்பட்டியில் நடந்த எரு தாட்டத்தில் காளை முட்டியதில் காட்டுகொட்டாயை சேர்ந்த பெரியசாமி (65) பலியானார்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம், ஜன.18- பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, சொந்த ஊர் திரும்ப ஏதுவாக, சேலம் கோட்டத்திலிருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் வெ.குணசேகரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தரும புரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊர் திரும்ப ஏதுவாக, சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு வழித்தடங்க ளில் ஜன.18, 19 ஆகிய தேதிகளில் 500 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலி ருந்து சேலம், நாமக்கல், ஒசூர், தருமபுரி மற்றும் மேட்டூ ருக்கும், சேலத்திலிருந்து சென்னை, மதுரை மற்றும் பெங் களூருக்கும், ஒசூரிலிருந்து சேலம், சென்னை, திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை, திருப்பூருக்கும், திருச்சியிலி ருந்து ஒசூருக்கும், பெங்களூருவிலிருந்து திருவண்ணா மலை, மதுரை, கோவைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளன. எனவே, கூட்ட நெரிசலை தவிர்த்து பொது மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை

உதகை, ஜன.18- முத்தரை பாலாடா அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்குள் சிறுத்தை நுழைந்ததால், நோயாளிகள் அச்ச மடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானை, காட் டெருமை உள்ளிட்ட விலங்குகள் நாளுக்கு நாள் வனப் பகுதியை விட்டு உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உதகை அருகே உள்ள முத்தோரை பாலாடாக பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் சனியன்று இரவு சிறுத்தை ஒன்று உணவு தேடி வந்துள்ளது. இதனை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்த நோயாளி ஒருவர் ஜன்னல் வழியாக செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். இதே போல், குன்னூர் நகரப்பகுதியான டெண்டில் குடி யிருப்பு பகுதியில், ஒரு வீட்டின் மேல் மாடியில் படுத் திருந்த நாயை, சிறுத்தை ஒன்று படிகள் வழியாக கவ்விக் கொண்டு ஓடியது. இந்தகாட்சிகள், அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவாகியுள்ளது. குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.

தொழிலாளி படுகொலை: உறவினர்கள் போராட்டம்

நாமக்கல், ஜன.18- இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தாத்தை யங்கார் பேட்டை, தேவனூர் புதூரை சேர்ந்தவர் கார்த் திக். கூலித் தொழிலாளியான இவருக்கு மீனா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலை யில், பொங்கல் விழாவையொட்டி தேவனூர்புதூரில் வழுக்கு மரம் ஏறும் போட்டி சனியன்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் கார்த்திக் தரப்புக்கும், மற்றொரு தரப்பிற்கும் வெற்றி யாருக்கு என ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினர் ஆயுதங்களால் கார்த்திக்கை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திக் உயிரிழந்தார். இவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர் பாக ஏற்கனவே சக்திவேல், தினேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மற் றொருவரை கைது செய்யக்கோரி, மருத்துவமனை யில் கார்த்திக்கின் மனைவி மீனா உள்ளிட்ட உறவினர் கள் ஞாயிறன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தலைமறை வாக இருந்த நபரை கைது செய்து விட்டோம் என போலீ சார் கூறியதால், போராட்டத்தை கைவிட்டு விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக தாத்தையங்கார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

இன்று மின்தடை

ஈரோடு, ஜன.18- அறச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று (இன்று) மின்விநியோகம் இருக்காதென தெரிவிக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கஸ்தூரிபா கிராமம், அறச்சலூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட் பட்ட பகுதிகளில் திங்களன்று (இன்று) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் தொட்டி கிணத்துபுதூர், தம்பிரான்வலசு, நல்லூத்துபாளை யம், எடக்காட்டுவலசு, காந்தி நகர், வாழைத்தோட்ட வலசு, கொல்லன்வலசு, குமாரபாளையம், சகாயபுரம், காசிபாளையம், கந்தசாமிபாளையம், தாண்டாம் பாளையம், சந்திரகாட்டுவலசு, பெரிச்சிப்பாளையம், எலவநத்தம், ஞானபுரம், பி.ஜி.வலசு, வெங்கமேடு, பச்சாக்கொட்டை மற்றும் பத்தியம்பாளையம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளோட்டில் காளிங்கராயர் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்

ஈரோடு, ஜன.18- வெள்ளோட்டில் நிறுவப்பட்ட காளிங்கராயரின் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயி றன்று திறந்து வைத்தார். கடந்த 743 ஆண்டுகளுக்கு முன்பு காளிங்கராயர் என்பவர், பவானி ஆற்றில் இருந்து விவ சாயத்திற்காக காளிங்கராயன் வாய்க்காலை வெட்டினார். காளிங் கராயன் பாளையத்திலிருந்து அக் ரகாரம், ஈரோடு, மொடக்குறிச்சி, கணபதி பாளையம், பாசூர், கரு மண்டம்பாளையம், ஊஞ்சலூர், வெங்கம்பூர் வரை சென்று மீண்டும் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதன் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பணப்பயிர்கள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக் கரில் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கால்வாயை வெட்டிய காளிங்கராயன் என்பவ ருக்கு சிலை, வெள்ளோட்டில் ஏற் கனவே வைக்கப்பட்டிருந்த நிலை யில், சிலை வைக்கப்பட்டிருந்த இடம் நெடுஞ்சாலைத்துறையால் அகலப்படுத்தப்பட்டது. இந்நிலை யில், புதுப்பிக்கப்பட்ட காளிங்கரா யன் சிலை வெள்ளோடு ராசா கோவில் அருகே நிறுவப்பட்ட நிலையில், ஞாயிறன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப் பினர்கள் அந்தியூர் செல்வராஜ், பிர காஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், ஈஸ்வரன், மாநக ராட்சி மேயர் நாகரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர். புனரமைப்புப் பணிகள் இதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கவனத் திற்கு கொண்டு சென்று பாடப் புத்தகத்தில் காலிங்கராயன் வர லாறு குறித்து இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காளிங் கராயன் கால்வாய் புனரமைப்புப் பணிக்கு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது, மார்ச் மாதத்தில் இருந்து 45 நாட்கள் காலிங்கராயன் வாய்க்காலில் தண் ணீர் நிறுத்தம் செய்யும் போது, புனர மைப்புப் பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காளிங் கராயன் வாய்க்கால் ஒட்டி அமைக் கப்பட்டுள்ள பேபி வாய்க்காலில், சில இடங்களில் கழிவுநீர் கலப்பது குறித்து தவறுகள் இருக்கலாம். பெரும்பகுதியான பேபி வாய்க் கால், கழிவுநீர் கலக்காமல் தடுக்கப் படுகிறது. மாநகரப் பகுதியிலிருந்து வரும் கழிவுநீர், வாய்க்காலில் கலக்காமல் தடுக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கழி வுநீர் கலப்பது குறித்து மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வின் அடிப்படையில்தான் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு எந்த இடத்தில் பணிகள் மேற்கொள்ளப் படலாம் என திட்டமிடப்பட்டு வரு கிறது, என்றார்.

சட்டவிரோத மது விற்பனை: 45 பேர் கைதுஈரோடு, ஜன.18- திருவள்ளுவர் தினத்தன்று சட்டவிரோத மாக மது விற்பனையில் ஈடுபட்ட 45 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவள்ளுவர் தினத்தையொட்டி, வெள்ளியன்று அனைத்து டாஸ்மாக் கடை கள் மற்றும் தனியார் மதுக்கூடங்களுக்கு விடு முறை விடப்பட்டிருந்தது. இதைப் பயன் படுத்தி மதுபாட்டில்களை பதுக்கிவைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அ.சுஜாதா தலைமையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் வெள்ளியன்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தாக 45 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்து 881 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கல்லட்டி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்!

உதகை, ஜன.18- கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகள் பயணித்த கார் தீப்பிடித்து எரிந்த தால், மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் விடுமுறை மற்றும் வார விடு முறையின் போது அதிகளவிலான சுற்று லாப் பயணிகள் நீலகிரி மாவட்டம், உதகை யிலுள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க வந்து செல்வது வழக்கம். தமிழ்நாடு மட்டு மின்றி கேரளம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில், பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாகவே உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. குறிப்பாக தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, முதுமலை புலிகள் காப்ப கம் என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்பட் டது. இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த அஸ் கர் அலி என்பவர் நண்பர்களுடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று சுற்றிப் பார்த்த பின்பு, ஞாயிறன்று கல்லட்டி மலைப்பாதை வழி யாக உதகை நோக்கி வந்து கொண்டிருந் தார். அப்போது நான்காவது கொண்டை ஊசி வளைவில் கார் வரும்பொழுது திடீரென முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியுள் ளது. சுதாரித்த ஓட்டுநர் காரை அங்கே நிறுத்தி, காரில் இருந்தவர்களையும் உடனடியாக கீழே இறங்கச் செய்தார். அடுத்த நொடியே மளமளவென தீப்பிடிக்க துவங்கியுள்ளது. இதனை பார்த்த சக வாகன ஓட்டுநர்கள் உட னடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை துறையினர், அரை மணி நேர போராட் டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மலைப் பாதையில் சுற்றுலாப் பயணிகளின் கார் தீப் பிடித்து எரிந்ததால், ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

தலைகுந்தா பகுதியில் ‘0’ டிகிரி செல்சியஸ்

உதகை, ஜன.18- நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடுங்குளிரால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தலைகுந்தா பகுதி யில் ஞாயிறன்று 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி யுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் குளிர் காலமாகும். அப்போது தினந்தோறும் அதிகாலை நேரங்களில் உறைபனி மற்றும் கடுங்குளிர் நிலவும். ஆனால், இந்தாண்டு புயல் மழை காரண மாக நவம்பர் மாதத்தில் தொடங்க வேண்டிய பனிக்காலம் தமாதமாக தொடங்கியது. டிசம்பர் மாதம் பாதியில் துவங்கிய உறைபனி கொட்டி தீர்த்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்ததன் காரணமாக பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், சனியன்று முதல் உதகை யில் மீண்டும் உறைபனி பொழிவு துவங்கியது. தொடர்ந்து, ஞாயிறன்று அதிகாலையில் தலைகுந்தா பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் பதிவானது. அரசு தாவரவியல் பூங்கா வில் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. வெப்ப நிலை குறைந்ததால், வீடுகளின் கூரைகள், வாகனங்கள் மற்றும் புல்வெளிகள் மீது வெள்ளை கம்பளம் போர்த்தி யது போல உறைபனி காணப்பட்டது. குறிப்பாக உதகை யிலுள்ள காந்தள், பிங்கர்போஸ்ட், தலைகுந்தா, இத்தலார், கல்லக்கொரை என சுற்றுவட்டார கிராமப் பகுதிகளிலும் உறை பனி காணப்பட்டது. தலைகுந்தாவிலுள்ள புல்வெளிகளில் படிந்துள்ள உறைபனியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததனர். இதனிடையே, உறைபனியின் தாக்கம் மீண் டும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்களின் இயல்பு நிலை மேலும் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.