பாத்திரங்கள் ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளி பலி
22 Mar 2026, 4:19 pm
<p><strong>பாத்திரங்கள் ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளி பலி</strong></p>
<p>சென்னை, மார்ச் 22- பெரம்பூர் மூலக்கடை பகுதியில் உள்ள கம்பெனியில் பாத்திரங்களை ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளி உயிரிழந்தார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவர் மூலக்கடை, தண்டை யார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் ஸ்டீல் பாத்திரம் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவரது உறவினர் நந்தாராம் (50) கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்துவந்துள்ளார். வழக்கம் போல் சனிக்கிழமை அனை வரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஸ்டீல் பாத்திரங்களை சிறிய லோடு ஏற்றும் லிப்ட் மூலம் முதல் மாடிக்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென லிப்ட் அறுந்து கீழே விழுந்ததில் கீழே பணியாற்றிக்கொண்டிருந்த நந்தாராம் இடுப்பின் மீது லிப்ட் விழுந்து அமுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நந்தாராம் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் காவல் துறையினர் நந்தாராம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.</p>
<p> </p>
