கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
2 Jan 2026, 3:33 pm

பேருந்துகளில் ஒட்டிய ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்த போலீசார்

அருப்புக்கோட்டை, ஜன.2- அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர்களை திடீரென நாம் தமிழர் கட்சியினர் ஒட்டினர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் அரசுப் பேருந்துகளில் திடீரென தமிழ்நாடு என பெயர் பொறிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை ஒட்டினர். அப்போது அங்கு வந்த போலீசார் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என எச்சரித்தனர். ஆனால், அக்கட்சியினர் மீறி ஒட்ட முயன்றனர். எனவே, ஸ்டிக்கரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காசோலை மோசடி வழக்கில் ஒருவருக்கு சிறைத்தண்டனை

சாத்தூர், ஜன.2- காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு சாத்தூர் நீதிமன்றம் 5 மாதம் சிறை தண்டனை விதித்தது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேல காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்(36). நிலம் விற்பனையாளாக உள்ளார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நாகலட்சுமி(45) என்பவருக்கு ரூ.5 லட்சத்தை வட்டிக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் நாகலட்சுமி பல மாதங்களாக வட்டி மற்றும் அசலை திருப்பித் தரவில்லையாம். மேலும், தனது வங்கிக் கணக்கில் பணம் இருப்பதாக கூறி காசோலை வழங்கியுள்ளார். அதில் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளது. எனவே, இது குறித்து சுப்புராஜ் சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வரதராஜன், காசோலை மோசடியில் ஈடுபட்ட நாகலட்சுமிக்கு 5 மாதம் சிறை தண்டனை மற்றும் ஒரு மாதத்திற்குள் வட்டியுடன் பணத்தை திருப்பித்தர வேண்டும் என உத்தரவிட்டார்.

காளையார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

சிவகங்கை, ஜன.2- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஆலங்குடியைச் சேர்ந்தவர் காவேரி மனைவி சாந்தி (வயது 55). இவர், கடம்பங்குடியில் தனது மகள் ராஜேஸ்வரி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் வெள்ளியன்று ஆடுகள் கட்டியி ருக்கும் கொட்டகைக்குச் சென்ற சாந்தி, அங்குள்ள தகரத்தை பிடித்துள்ளார். அப்போது, வீட்டிற்குச் சென்ற மின்சாரம் எதிர்பாராத விதமாக தகரத்தில் பாய்ந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சாந்தி, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காளையார் கோவில் காவல்துறையினர், சாந்தியின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காளையார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அலவாக்கோட்டையில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சிவகங்கை, ஜன.2- சிவகங்கை ஒன்றியம் மதகுபட்டி அருகே உள்ள அலவாக்கோட்டை மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இம் முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் ஏற்பாட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் அன்று காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது. இம் முகாமில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான அளவீடுகள், புது அட்டை பதிவு செய்தல் மற்றும் பழைய அட்டை புதுப்பித்தல்,இரயில் பேருந்து இலவச பயண அட்டைகள் உள்ளிட்ட சேவைகள் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. முகாமிற்கு வருபவர்கள் தங்களது பழைய ஆவணங்கள் மற்றும் அதன் நகல்கள், பயனாளர் நிழற்படங்களை கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் அணுகு சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு

விருதுநகர், ஜன.2- விருதுநகர் நான்கு வழிச் சாலைய ருகே உள்ள அணுகுசாலையில் கழிவு நீர் தேங்கிக்கிடப்பதால் அப்பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. விருதுநகர்-சிவகாசி சாலையின் குறுக்கே நான்கு வழிச் சாலை மேம்பா லம் உள்ளது. இதையடுத்து, மதுரை செல்வ தற்கான அணுகு சாலை உள்ளது. இப்பகுதி யில் உணவகங்கள், கார், லாரி பழுது நீக்கும் நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. ஏற்கனவே, உணவகங்களின் கழிவு நீர் வேறு வழியில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அக்கழிவு நீரை சாலையில் செல்லும் வகையில் செய்து விட்டதாக அப்பகுதியினர் தெரி விக்கின்றனர். இதனால், அருகில் உள்ள மழை நீர் வடிகால் நிரம்பி கழிவு நீர் சாலையில் தேங்கிக் கிடக்கிறது. இதன் காரணமாக அதிலிருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், ஏராளமான கொசுக்களும் உற் பத்தியாகின்றன. இதேநிலை நீடித்தால் அணுகுசாலை சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வா கம் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரை அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதியினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

விருதுநகர், ஜன.2- விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விருதுநகர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அரசு உயர் நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டதால் சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரது தந்தையின் ஆதார் அட்டையை கேட்பது போல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்தநிலையில், வேல்முருகனிடம் இருந்து அச்சிறுமி தப்பியோடி அருகில் உள்ள வீட்டிற்குள் சென்று விட்டாராம். பின்பு, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில், வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

விருதுநகர், ஜன. 2- விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கியதில் கட்ட டத் தொழிலாளி உயிரி ழந்தார். விருதுநகர் அருகே சூலக்கரை மேடு பகுதி யைச் சேர்ந்தவர் முருகன் (31). இவர் கட்டடங்களுக்கு சென்ட்ரிங் பலகை அடை க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல பணிக்கு சென்றுள் ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப் பட்ட முருகன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புத்தாண்டுக் கொண்டாட்டம் திருவில்லிபுத்தூர்

, ஜன.2- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தன்யா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் புத்தா ண்டு நிகழ்ச்சி மனமகிழ் விழா நடை பெற்றது. சங்க தலைவர் ராமானு ஜம் தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன் வர வேற்றார். மூத்த ஆலோச கர் ஐயா கரியமால் முன்னி லை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் சிறப்புரையாற்றி னார். சங்க பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.

விருதுநகரில் இரயில் மோதி கட்டிடத் தொழிலாளி பலி

விருதுநகர், ஜன.2 விருதுநகரில் ரயில் தண்டவாளத்தை கடந்து வந்த கட்டிடத் தொழிலாளி மீது இரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராம் தியேட்டர் சாலை யைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( 30). கட்டிட தொழிலாளி யான இவருக்கு சாவித்திரி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் வெள்ளியன்று காலை ராஜ்குமார் தேநீர் குடித்து விட்டு வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அருப்புக்கோட்டை சாலை இரயில்வே மேம்பா லத்தின் கீழ் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுள் ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்காக தண்டவா ளத்தை கடந்த போது, மதுரையில் இருந்து திருநெல் வேலி நோக்கிச் சென்ற இரயில் எதிர்பாராத விதமாக ராஜ்குமார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் இரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ராஜ்குமார் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

சட்ட விரோதமாக தயாரிப்பு சாத்தூர் அருகே தோட்டத்தில் பட்டாசு கருந்திரிகள் வெடித்து விபத்து அசாம் மாநில சிறுவர்கள் 2 பேர் பலி

சாத்தூர், ஜன. 2- சாத்தூர் அருகே தோட் டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு திரி தயாரிப்பில் ஈடு பட்டபோது திடீர் விபத்து ஏற்பட்டது.இதில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் பலியாகினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கே.மேட்டுப்பட்டி. இங்கு நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் அசாம் மாநி லத்தை சேர்ந்த 5 பேர் தங்கி இருந்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க பயன் படும் கருந்திரியை இயந்தி ரத்தில் தயார் செய்து வந்த தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளி யன்று வழக்கம் போல் தொழி லாளர்கள் இயந்திரம் மூலமாக கருந்திரி தயாரித்து கொண்டிருந்தனர். அப் போது எதிர்பாராத விதமாக மின்சார வயர்களில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அசாம் மாநிலத்தை சபி துள் அலி (16)ஜெய் துல் ஹுசைன் (15), ஆகிய இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் உயிரி ழந்த இருவரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோத னைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நிகழ்ந்த இடத் தில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தோட்டத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக பட்டாசு கருந்திரி தயா ரித்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் விவசாய தோட்ட உரிமையாளர் சரவ ணன் மீது அப்பையநாயக் கன் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு ஆண்டில் 12 லஞ்ச வழக்குகளில் ரூ.16.50 இலட்சம் பறிமுதல் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

விருதுநகர், ஜன.2- விருதுநகர் மாவட்டத் தில் ஒரே ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 12 வழக்குகளை பதிவு செய்து 16 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாயை கைப்பற்றினர். இதுகுறித்து விருது நகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியதாவது: விருது நகர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியா ளர், கூட்டுறவு சார்பதிவா ளர், மின் வாரிய உதவி பொறியாளர், பேரூராட்சி இளநிலை பொறியாளர் என அரசு மற்றும் பொதுத்துறை அலுவலர்கள் உட்பட மொத்தம் 8 பேர் லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1,03,500 லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் அவர்களின் வீடுகளில் நடத்திய சோத னையில் ரூ.8 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது. அது லஞ்சப் பணமாக இருக்க லாம் என நீதிமன்றத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்துறை, அரசு ஊழியர்கள் பொது மக்களிடம் வேலையை செய்து தர லஞ்சப்பணம் பெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மூன்று அரசு அலுவலகங்களில், மாவட்ட துணை ஆய்வு குழு அலுவலர் தலைமை யில் திடீர் சோதனை செய்யப் பட்டது. அங்கு லஞ்சப் பணம் என சந்தேகிக்கப் படும் ரூ. 7 இலட்சத்து 59ஆயி ரம் பறிமுதல் செய்து, 3 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

முதுகுளத்தூரில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் செல்வநாயகபுரம் பள்ளியில் நடைபெறுகிறது

இராமநாதபுரம்,ஜன.2- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: முதுகுளத்தூர் வட்டா ரத்திற்குட்பட்ட தேரிருவேலி ரோட்டில் அமைந்துள்ள முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியில் 03.01.2026 அன்று நடைபெற இருந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிகிச்சை மருத்துவ முகாமானது இடம் மாற்றம் செய்யப்பட்டு முது குளத்தூர் வட்டாரத்திற் குட்பட்ட செல்வநாயக புரத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 03.01.2026 அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப் போம், நடப்போம் நலம்பெறு வோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என்று மிகப்பெரிய அளவிலான சிறப்பு திட்டங்கள் செயல் பட்டு வருகிறது. அந்த வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் திட்டம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கிற வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாமில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டறிந்து அங்கேயே சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது மற்றும் புதிதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தி ற்கு இணைவதற்குரிய வசதிகளும் ஏற்பாடு செய் யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்து மோசடி அதிமுக நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர், ஜன.2 – சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டி யின் சொத்துகளை, போலி ஆவ ணங்கள் மூலம் மோசடி செய்த, அதிமுக நிர்வாகி உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். தொழிலதிபரான இவ ருக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை, சிராஜ்பூர் நகர், செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துக்கள் இருந்தன. இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்தார். பிறகு, இவரது மனைவி முகமதா பேகம் (76), என்பவரிடம், தஞ்சா வூரை சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்ப வர், தங்களின் சொத்துக்களை பரா மரித்து, பாதுகாத்து தருவதாக நம்பிக் கையை ஏற்படுத்தியுள்ளார். இதை நம்பி, அவரிடம் முகமதா பேகம் பொறுப்பை ஒப்படைத்தார். ஸ்ரீவித்யா சுமதி தனக்கு அறிமுகமான, தஞ்சா வூரைச் சேர்ந்த அதிமுக மத்திய மாவட்ட அம்மா பேரவையின் மாவட்டத் தலைவரான கேபிள் செந்தில் (எ) செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மூலம், முகமதா பேகத்திடம், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, போலியான பவர் ஆஃப் அட்டர்னி, விற்பனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து, பல்வேறு கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும் செங்கிப்பட்டி, சிராஜ்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் இடத்தினை, செந்தில்குமார் தனது உறவினரான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார். அத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியில், சிரா ஜூதீனுக்கு சொந்தமான இடத்தினை யும், அவர் அன்பளிப்பாக வழங்கி விட்டதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அபகரித்துள்ளனர். மேலும் மூன்று வங்கிகளில் முகமதா பேகம் பெயரில், கணக்கு துவங்கி பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிரா ஜூதீன் வீட்டினை உடைத்து, அங்கி ருந்த ஆவணங்கள், 4 இருசக்கர வாக னங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், பணம், நகைகளையும் திருடியுள்ள னர். இது குறித்து தகவலறிந்த முகமதா பேகம், செந்தில்குமார் உள்ளிட்டோ ரிடம் கேட்டுள்ளார். ஆனால், முறை யான பதில் அளிக்காமல் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியு உள்ளனர். வயது மூப்பு காரணமாக முகமதா பேகம் அமைதியாக இருந் துள்ளார். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்களின் உதவியோடு, போலி ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான இடத்தை அபகரித்ததாக செந்தில்குமார், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், பெட்ரி ஷியா ஜோனி, ஸ்ரீவித்யா சுமதி, செல்லப் பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோர் மீது, தஞ்சாவூர் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் 9 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.