நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் தொழிலாளி பலி
8 Apr 2026, 5:30 am

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் தொழிலாளி பலி

புதுக்கோட்டை, ஏப். 7- புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஒருவர் பலியானார். புதுக்கோட்டை அருகே, நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.

திங்கட்கிழமை தேரோட்டம் நடந்த நிலையில், தேரை பக்தர்கள் இழுத்த போது சங்கிலி அறுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அறுந்த சங்கிலியை இணையாக தூக்கிப்பிடித்தபடி சேர்ந்த தேருக்கு கட்டை போடும் தொழிலாளி மணிவண்ணன் (45) என்பவர், சம்பந்தப்பட்ட எடுத்து சங்கிலியில் அடிபட்டுள்ளார்.

அப்போது நிலைதடுமாறி தேரில் மோதியுள்ளார். அப்போது தேரில் இருந்த ஆணி அவர் தலையில் குத்தியதில் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் மணிவண்ணனை மீட்டு சிகிச்சைக்காக நார்த்தாமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிவண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதனையடுத்து கீரனூர் காவல்துறையினர் மணிவண்ணன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.