நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் தொழிலாளி பலி
8 Apr 2026, 5:30 am

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் தொழிலாளி பலி

புதுக்கோட்டை, ஏப். 7- புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஒருவர் பலியானார். பங்குனி திருவிழா தேரோட்டத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்தது.

தேரை பக்தர்கள் இழுத்த போது சங்கிலி அறுந்த நிலையில், அதனை இணைக்க முயன்ற தொழிலாளி மணிவண்ணன் நிலைதடுமாறி தேரில் மோதி உயிரிழந்தார்.

கீரனூர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.