தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிணறு வெட்டும் பணியின் போதுதொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

6 Nov 2026, 12:48 am
கிணறு வெட்டும் பணியின் போதுதொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு
<p><strong>கிணறு வெட்டும் பணியின் போதுதொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு</strong></p><p>சேலம், நவ.5-ஏற்காடு அருகே கிணறு வெட்டும் பணியின் போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தொழிலாளி ஒருவர்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொம்மக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் கிணறு வெட்டும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், வியாழனன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது போட்டுக்காடுபகுதியை சேர்ந்த ராஜா (45) என்ற தொழிலாளி உள்ளிட்டஏழுக்கும் மேற்பட்டோர் வழக்கம்போல் பணிக்கு சென்றனர்.வேலைக்கு சென்றவர்கள் கிணற்றுக்குள் இறங்கி வேலை செய்வதற்காக முதலில் கயிறு மூலம் இரண்டு பேர்இறங்கியுள்ளனர். பின்னர் மூன்றாகவதாக ராஜா இறங்கும் போது கிணற்றுக்குள் தவறிவிழுந்தார். இதில் ராஜாவின் பின் தலையில் பலத்த காயமடைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தசகதொழிலாளர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ராஜாவிற்கு அதிக ரத்தம் வெளியேறி அங்கேயே உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்துசம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு காவல்துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.