சென்னை விரைவு செய்திகள்
2 Mar 2026, 3:30 pm

முதியவர்களின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகம்

கிருஷ்ணகிரி, மார்ச் 2- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘தாயுமான வர்’ திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் பணி தொடங்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 28,132 குடும்ப அட்டை களுக்கு 309 குழுக்கள் மூலம் 463 வாகனங்கள் வாயிலாகப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஓசூர் வட்டத்தில் தேர் திருவிழா காரணமாக, மார்ச் 3-க்குப் பதிலாக மார்ச் 4-ஆம் தேதி பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

2ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

சென்னை, மார்ச் 2- சென்னை வண்ணாரப் பேட்டையில் புதிதாகக் கட்டப்படும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் 2ஆவது தளத்திலிருந்து கீழே விழுந்து மேற்கு வங்கத் தொழிலாளி உயி ரிழந்தார். வண்ணாரப்பேட்டை கிழக்குக் கல்லறைச் சாலை யில் தமிழகக் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் புதிதாக ஓர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வரு கிறது. இந்தக் கட்டுமானப் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் குடியிருப்பின் 2ஆவது தளத்தில் ஜன்னல் பொருத்தும் பணியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கோகுல் (30) உள்ளிட்ட சில தொழிலாளர்கள் திங்கட் கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலை தடுமாறி கோகுல், 2ஆவது தளத்திலிருந்து கீழே விழுந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த கோகுலை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கோகுல் ஏற்கனவே இறந்து விட்ட தாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வண்ணாரப் பேட்டை காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.