கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
13 Nov 2025, 3:30 pm
<p><strong>கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை</strong></p>
<p>நாமக்கல், நவ.13- பள்ளிபாளையம் அருகே கடன் தொல்லையால் வீடியோ வாக்குமூலம் கொடுத்துவிட்டு தொழிலாளி தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஐந்து பனை பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (42). போட்டோ எடிட் செய்யும் தொழிலாளியான இவருக்கு தினேஷ், ஹரி ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கமாகி னர். சேலத்தில் தினேஷ், ஹரி நடத்தும் ஸ்டுடியோவில் நந்த கோபால் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், நந்த கோபாலுக்கு பணத்தேவை ஏற்படவே தினேஷிடம் கடன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அவர் சில இடங்களில் லோன் மூலமாகவும், தனிப்பட்ட நபர்களிடமும் கடன் தொகையை பெற்றுத் தந்துள்ளார். இந்த அடிப்படையில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை நந்தகோபால் வெளியிடங் களில் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் நந்தகோபாலை பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். மேலும் பணம் கொடுத்த ஸ்டுடியோ நடத்தும் தினேஷ், ஹரி ஆகி யோரும் நீ உடனடியாக பணத்தை தர வேண்டும் என தொடர்ந்து அவரை வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த நந்தகோபால் வீடியோ வாக்கு மூலம் ஒன்றை தன்னுடைய செல்போனில் வெளியிட்டுள் ளார். அதில் தன்னுடைய சாவுக்கு காரணம் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர் ஹரி என, குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்துவிட்டு புதனன்று இரவு சாணி பவுடர் குடித்துள்ளார். அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் வியாழ னன்று அதிகாலை வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பள்ளி பாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் தினேஷும் இறந்து போன நந்தகோபாலும் பேசும் ஆடியோவில் நந்தகோபாலிடம் தினேஷ் நீ உடனடியாக 2 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து தர வேண்டும் பள்ளி பாளையத்தில் கிட்னி விற்பனை அதிகமாக நடைபெறு கிறது. எனவே உனது கிட்னியை விற்றாவது நீ எங்களுக்கு பணம் தர வேண்டும் என வலியுறுத்தி பேசுகிறார். இதுகுறித்து ஆடி யோக்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் போலீ சார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே வறுமையின் காரண மாக விசைத்தறி தொழிலாளர்கள் பலரும் கிட்னி விற்பனை செய்துள்ள நிலையில், மேலும் ஒரு சம்பவமாக கடன் நெருக்கடியில் சிக்கி உள்ள தொழிலாளியிடம் கிட்னி யை விற்றாவது கடனைக் கட்டு என வெளியாகி உள்ள ஆடி யோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
