தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

5 Apr 2026, 6:26 pm
சென்னை விரைவு செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் பணி விரைவில் நிறைவு

சென்னை, ஏப்.5- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில், சேத்பத் முனையில் அமைக்கப்பட்டு வரும் புதிய நடைமேம்பாலம்  வரும் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது பார்க் ரயில் நிலைய முனையில் உள்ள ஒரே ஒரு பாலத்தை மட்டுமே பயணிகள் சார்ந்துள்ள நிலையில், இந்த புதிய பாலம் 11 நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் அமையவுள்ளது. இதில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நவீன மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட உள்ளன. கட்டுமானப் பணிகளை முன்னிட்டு, ஏப்ரல் 7-ஆம் தேதி வரை காலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் இந்த மேம்பாலம், எதிர்காலத்தில் அமையவுள்ள ‘ரூஃப் பிளாசா’வுடன் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் கடத்தித் தாக்குதல்

சென்னை, ஏப்.5- தனது  தோழியை தொந்தரவு செய்ததாக, கடலூரைச் சேர்ந்த 19 வயது சட்டக் கல்லூரி மாணவர் சசிகுமார் என்பவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேட்டில் தங்கிப் படித்துக்கொண்டே பகுதிநேர வேலை பார்த்து வந்த சசிகுமார், தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் நட்பில் இருந்துள்ளார். கடந்த மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரிவைத் தொடர்ந்து, மாணவியின் நண்பர்களிடம் சசிகுமார் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் நண்பர்கள், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு சசிகுமாரை அழைத்து, காரில் கடத்திச் சென்று கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு அறையில் வைத்துத் தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பித்த சசிகுமார் அளித்த புகாரின் பேரில், நான்கு பேரைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவான்மியூர் - தரமணி  மெட்ரோ ரயில் சுரங்கப்பணி தாமதம்

சென்னை, ஏப்.5-  சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், திருவான்மியூர் முதல் தரமணி வரையிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இத்தடத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய ‘பவானி’ என்ற சுரங்கத் துளையிடும் இயந்திரத்தின்  ‘ஹைட்ராலிக் சிலிண்டர்களில்’ பழுது ஏற்பட்டதே இதற்குக் காரணம். பாறை நிறைந்த இப்பகுதியில் துளையிட சிறப்பு இயந்திரம் தேவைப்படும் நிலையில், தற்போது பழுதான இயந்திரம் மும்பையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் பாதியில் சீரமைப்புப் பணிகள் முடிந்து, மே மாதம் திருவான்மியூரில் இயந்திரம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இப்பகுதியில் முழுமையான சுரங்கப்பணிகள் ஜூன் மாதமே தொடங்கும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி ரத்து போன்ற காரணங்களால் இத்தடத்தில் பணிகள் தாமதமான நிலையில், தற்போதைய இயந்திரப் பழுது பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒலி மாசை குறைக்க ஐஐடி மெட்ராஸின் புதிய தொழில்நுட்பம்!

சென்னை, ஏப்.5- சென்னை மாநகரின் போக்குவரத்து இரைச்சலைக் கட்டுப்படுத்த ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் நவீன ஒலி தடுப்பு அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் எஸ்.எம். சிவ நாகேந்திரா தலைமையிலான குழு, ‘அகவுஸ்டிக் ரெசனேட்டர்கள்’ மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு ஒலியை உறிஞ்சும் கட்டமைப்புகளை வடிவமைத்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் இரைச்சலை 30 முதல் 40 டெசிபல் வரை குறைக்க முடியும். சமீபத்திய ஆய்வில், சென்னை நகரின் பல பகுதிகளில் ஒலி அளவு நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, குறிப்பாக மருத்துவமனைகள் அருகே 70 டெசிபலுக்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டது. முதற்கட்டமாக, அடையாறு புற்றுநோய் நிறுவனச் சந்திப்பு போன்ற பகுதிகளில் இந்தத் தடுப்பு அமைப்புகளைச் சோதனை முறையில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. அடர்த்தியான மரங்கள் மற்றும் இந்தப் பொறியியல் கட்டமைப்புகள் இணைந்து செயல்படும்போது நகரச் சூழல் அமைதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாம்பழ வரத்துமந்தம்: மே மாதத்தில் விலை குறைய வாய்ப்பு

சென்னை, ஏப்.5- கோடை மழை பெய்யாததால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு மாம்பழ வரத்து குறைந்து, சீசன் இன்னும் வேகம் எடுக்கவில்லை. ஆந்திராவிலிருந்து வரும் ‘பங்கனப்பள்ளி’ ரகம் தற்போது சில்லறை விற்பனையில் கிலோ ரூ.220 வரை விற்கப்படுகிறது. மழையின்மையால் பழங்களின் சுவை மற்றும் தரம் குறைவாக இருப்பதாக நுகர்வோர் கருதுகின்றனர். வழக்கமாக 60 லாரிகள் வரை வரும் நிலையில், தற்போது 15 லாரிகளுக்கும் குறைவாகவே மாம்பழங்கள் வருகின்றன. ஏப்ரல் இறுதியில் வரத்து அதிகரித்து, மே மாதத்தில் இமாம் பசந்த், அல்போன்சா உள்ளிட்ட ரகங்கள் சந்தைக்கு வரும்போது விலை குறையும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

மின்சாரம் பாய்ந்து  தொழிலாளி பலி

சென்னை, ஏப்.5-  சென்னை புழல் அருகே கவங்கரை பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆலம்கி (35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டிட மேஸ்திரியாகப் பணியாற்றி வந்த அவர், வெள்ளிக்கிழமை அன்று தான் தங்கியிருந்த கட்டுமானப் பணியின் நுழைவாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலிருந்த உயர் அழுத்த மின்கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பலியானார்.

மின்சாரம் பாய்ந்து  தொழிலாளி பலி

சென்னை, ஏப்.5-  சென்னை புழல் அருகே கவங்கரை பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆலம்கி (35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டிட மேஸ்திரியாகப் பணி யாற்றி வந்த அவர், வெள்ளிக்கிழமை அன்று தான் தங்கியிருந்த கட்டு மானப் பணியின் நுழை வாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேலிருந்த உயர் அழுத்த மின்கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பலி யானார்.

தண்ணீரில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.5- தேன்கனிக்கோட்டை வட்டம் தளி பகுதி உளி பெண்டா கிராமத்தில் வீட்டில் தண்ணீர் நிரப்பப்  பட்ட பாத்திரம் அருகே ஒன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டி ருந்தது. அப்போது குழந்தை தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளதை யாரும் கவனிக்கவில்லை. இதனால் அந்த குழந்தை மூச்சுதினறி உயிரிழந்தது.  தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாம்பழ வரத்துமந்தம்: மே மாதத்தில் விலை குறைய வாய்ப்பு

சென்னை, ஏப்.5- கோடை மழை பெய்யாததால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு மாம்பழ வரத்து குறைந்து, சீசன் இன்னும் வேகம் எடுக்கவில்லை. ஆந்திராவிலிருந்து வரும் ‘பங்கனப்பள்ளி’ ரகம் தற்போது சில்லறை விற்பனையில் கிலோ ரூ.220 வரை விற்கப்படுகிறது. மழையின்மையால் பழங்களின் சுவை மற்றும் தரம் குறைவாக இருப்பதாக நுகர்வோர் கருதுகின்றனர். வழக்கமாக 60 லாரிகள் வரை வரும் நிலையில், தற்போது 15 லாரிகளுக்கும் குறைவாகவே மாம்பழங்கள் வருகின்றன. ஏப்ரல் இறுதியில் வரத்து அதிகரித்து, மே மாதத்தில் இமாம் பசந்த், அல்போன்சா உள்ளிட்ட ரகங்கள் சந்தைக்கு வரும்போது விலை குறையும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.