தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரை வேட்டி, கட்சி துண்டுகள் தயாரிப்பு பணி தீவிரம்

19 Mar 2026, 3:18 pm
கரை வேட்டி, கட்சி துண்டுகள் தயாரிப்பு பணி தீவிரம்
<p><strong>கரை வேட்டி, கட்சி துண்டுகள் தயாரிப்பு பணி தீவிரம்</strong></p> <p>நாமக்கல், மார்ச் 19- ராசிபுரம் அருகே சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி துண்டுகள் மற்றும் வேட்டிகள் தயாரிக்கும் பணி தீவிர மடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வெண் ணந்தூரில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசைத்தறி தொழிலில் ஈடு பட்டு வருகிறார்கள். இங்கு வேஷ்டி, துண்டு மற்றும் சேலை கள் தயாரிப்பு பிரதானமாக இருந்து வரும் நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலையொட்டி கட்சித் துண்டுகள் மற்றும் வேஷ்டிகள் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. குறிப் பாக சிவப்பு துண்டுகள், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி களின் துண்டுகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரி களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. &nbsp;இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில், தேர் தலையொட்டி ஜவுளி உற்பத்தி அதிகரித்தால் விசைத்தறி யாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலில் இருப்பதால் வியாபாரிகளுக்கு கொண்டு &nbsp;சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வழக்கமாக உற்பத்தி செய்யப்படும் துண்டுகளை விட சட்டமன்றத் தேர்தல் காரண மாக அதிகமான துண்டுகள் தயாரிக்கப்படுகிறது. நிதிச்சுமை காரணமாக கூடுதல் முதலீடு போட்டு அனைத்து கட்சியின ருக்கும் துண்டுகளை தயாரித்துக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. அதனால் ஜி.எஸ்.டி.யில் இருந்து விசைத்தறியில் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தேர்தல் காலங்களில் வங்கி மூலம் கடன் வசதி கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டால் தொழிலை மேலும் சிறப்பாக செய்ய முடியும். அதோடு நடப்பு தேர்தலில் வெண்ணந்தூர் பகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சித் துண்டுகள் அதிக அள வில் தயாரிக்கப்படுகிறது. அதன்படி சுமார் ரூ.1 கோடி &nbsp;மதிப்பிலான கட்சி துண்டுகள் மற்றும் வேஷ்டிகள் விற்ப னையாகும். அதிகளவு உற்பத்தி நடைபெற்றாலும், அதை பல்வேறு நிலைகளை கடந்து வாடிக்கையாளர்களுக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் கொண்டு சேர்ப்பதில், தற் போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பல்வேறு &nbsp;பிரச்சனைகள் இருப்பதால் எத்தனை ஜவுளிகளை உற்பத்தி &nbsp;செய்து அனுப்புகிறோமோ அதற்கு ஏற்ற வகையில் மிகச் சரியான அளவில் துல்லியமாக கணக்கிட்டு ரசீது உடன் சேர்த்து அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. பொதுவாகவே நாமக்கல் மாவட்டம் முழுவதும் குடிசை தொழில் போன்று ஏராளமான இடங்களில் இதுபோல விசைத் தறிகள் இயங்கி வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை கள் காரணமாக மொத்தமாக ஜவுளிகளை கொண்டு செல்வது சிரமம் ஏற்பட்டு வருகிறது. இருந்த போதிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது தொழிலாளர்களுக்கும் எங்களுக்கும் வேலை வாய்ப்பு கணிசமான அளவில் அதி கரித்துள்ளது என கூறுகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.