தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்
23 Jan 2026, 5:49 pm

தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

உதகை, ஜன.23- நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க, முன் கூட்டியே வன சாலைகள் இருபுறமும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி 60 சதவிகிதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும். கடந்த 20 ஆண்டுக ளுக்கு பிறகு வரலாறு காணாத உறை பனி பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் பெரும்பாலும் செடி, கொடிகள் கருகி யது. தற்போது முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார வனப் பகுதிகளில் உள்ள மரங்கள், செடி கொடிகள் கருக துவங்கியுள்ளதால், சில இடங்களில் காட்டுத்தீ ஏற்ப டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை முன்கூட்டியே தடுக்க முதுமலை புலி கள் காப்பக இணை இயக்குநர் கணே சன் உத்தரவின் பேரில், உள்மண்ட லம் மற்றும் வெளிமண்டல வனப்பகுதி களிலுள்ள சாலையோர இருபுறமும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி சாலையில் வாகனத்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் புகை பிடிக்கக்கூடாது என வனத்துறை யினர் அறிவுறுத்தியுள்ளனர். சாலை யோரங்களில் தற்போது யானை, அரியவகை கடமான், சிங்கவால் குரங்கு, மான், மயில் போன்ற வன விலங்குகள் உலா வருவதால், சுற்று லாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டி கள் வாகனங்களை நிறுத்தி இறங்கக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.

இடம்பெயரும் வனவிலங்குகள்

பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தாவரங்கள் காய்ந்து வருகின்றன. காப்பகத்தில் தாவரங்கள் இல்லாததால் விலங் குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன. தற்போது ஓரளவு பசுமை உள்ள நிலையில், வரும் நாட்களில் பனிப் பொழிவு அதிகரித்து, காப்பகத்தில் வறட்சி மேலோங்கி வனத்தீ ஏற்ப டும் அபாயம் உள்ளது. தற்போது காணப்படும் சில விலங்குகளும் இடம் பெயர்ந்து விடும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.