விபத்துகளை தடுக்க, உருளை தடுப்பான்கள் அமைக்கும் பணி தீவிரம்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>விபத்துகளை தடுக்க, உருளை தடுப்பான்கள் அமைக்கும் பணி தீவிரம்</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 8- ஒகேனக்கல் கணவாய் சாலை களில் விபத்துகள் ஏற்படுவதை தடுக் கும் வகையில், ஆபத்தான வளைவு களை கண்டறிந்து, அவ்விடங்களில் சுழலும் ரப்பர் கொண்ட உருளை தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தின் முக் கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கலுக்கு, தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந் தும் சுற்றுலாப் பயணிகள் அதிகள வில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள், பென்னாகரம் அருகே மடம் சோதனைச்சாவடி பகுதியிலி ருந்து சுமார் 12 கி.மீ அடர்ந்த வனப் பகுதி வழியாகவும், 5 கி.மீ ஆபத்து நிறைந்த வளைவுகளுடன் கூடிய கணவாய் சாலையிலும் பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வழியாக செல்லும் சில வாகனங்கள் கணவாய் பகுதிகளில் உள்ள வளைவுகளில் மோதி பள்ளத்தாக்கில் விழுகின்றன. இதை குறைக்கும் வகையில், பென் னாகரம் நெடுஞ்சாலைத்துறை சார் பில் கணவாய் சாலைகளில் உள்ள வளைவுகளில் அலுமினிய தடுப்பு கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பி னும் அவ்வப்போது தொடர்ந்து சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் ஆபத்து நிறைந்த வளைவுகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடைத்து கொண்டு சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளா கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க பென்னாகரம் நெடுஞ் சாலைத்துறை சார்பில் கணவாய் சாலையின் தொடக்கம், இரண்டா வது வளைவு, கணவாய் ஆஞ்ச நேயர் கோவில் பகுதி, முடிவுறும் கண வாய் வளைவு என நான்கு இடங் களை தேர்வு செய்து, தடுப்புகளு டன் சுழலக்கூடிய வகையில் ரப்பர் உருளைகள் கொண்ட தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இதுகுறித்து பென்னாகரம் உதவி கோட்டப் பொறியாளர் புரு ஷோத்தமன் கூறுகையில், ஒகேனக் கல் கணவாய் பகுதி வழியாக வரும் சுற்றுலா வாகனங்கள் கட்டுப் பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுவதை தவிர்ப்பதற்காக, முதற் கட்டமாக சாலை பராமரிப்புப் பணி நிதியிலிருந்து ரூ.90 லட்சம் மதிப்பீட் டில் சுழல் உருளை ரப்பர்களை கொண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கட்டுப்பாட்டை இழந்த வாகனமானது தடுப்புகளின் மீது மோதும் போது, பள்ளத்தில் விழாமல் சுழல் உருளை ரப்பர் தடுத்து, வாகனங்களை திருப்பி விடுவதால் பெரும் விபத்தை தடுக் கலாம். நீலகிரி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விபத்து களை தடுப்பதற்காக அமைக்கப் பட்டுள்ள சுழலும் ரப்பர் தடுப்புகள் முதல்முறையாக ஒகேனக்கல் கண வாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரு கிறது. விபத்துகளை தடுப்பதற்காக கணவாய் பகுதிகளில் ஆபத்து நிறைந்த வளைவுகளை நெடுஞ் சாலைத்துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, வரும் ஆண்டுகளில் நிதிநிலைக்கேற்ப தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெறும், என்றார்.</p>
