‘யானை புகா’ நவீன வேலி அமைக்கும் பணி தீவிரம்
21 Jan 2026, 3:58 pm
<p><strong>‘யானை புகா’ நவீன வேலி அமைக்கும் பணி தீவிரம்</strong></p>
<p>கோவை, ஜன.21- தொண்டாமுத்தூர் பகுதியில் யானை - மனித மோதல்களைத் தடுக்கும் வகையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன எஃகு கம்பி வேலிகள் அமைக்கும் பணி கள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. கோவை மாவட்டம், தொண்டா முத்தூர் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் வனப்பகுதியி லிருந்து வெளியேறும் காட்டு யானைகள், அவ்வப்போது குடி யிருப்புக்குள் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்து வதும் தொடர்கதையாகி வருகி றது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சார்பில் நவீன பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. போளுவாம்பட்டி வனச்சரகத் தில் அட்டுக்கல் முதல் வேட்டைக் காரன் கோயில் வரை 5 கி.மீ, கோவை வனச்சரகத்தில் அட்டுக் கல் முதல் பொம்மணம்பாளையம் வரை 5 கி.மீ என 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த எஃகு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வரு கின்றன. தற்போது முதற்கட்டமாக மருதமலை கருப்பராயன் கோயில் பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கு பணி கள் நிறைவடைந்துள்ளன. இதற்கிடையே, யானைமடவு என்ற பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேற முயன்ற காட்டு யானை ஒன்று, புதிதாக அமைக்கப் பட்டிருந்த இரும்புத்தூண்களைத் தள்ளி சேதப்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையி னர், உடனடியாகச் சென்று வேலி யைச் சீரமைக்கும் பணிகளை மேற் கொண்டனர். இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகை யில், “ஓசூரில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட எஃகு கம்பி வேலி திட்டம், கோவையிலும் சோதனை முயற்சியாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. யானை மடவு பகுதியில் மண் இலகுவாக இருந்ததால் யானை அழுத்தம் கொடுத்தபோது தூண் பெயர்ந்துள் ளது. இனிவரும் காலங்களில் ஓடைப் பகுதிகளில் தூண்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கவும், அதிக நீளம் மற்றும் அகலமான கான்க்ரீட் அடித்தளம் (Bed) அமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், கும்கி யானை களைக் கொண்டு இந்த வேலிகளின் பலத்தைப் பரிசோதிக்கவும், கண் காணிப்பு கேமராக்கள் மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த நவீன வேலி அமைக்கும் பணி விரைவில் நிறைவடைந்தால், இப்பகுதியில் யானை - மனித மோதல்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
