முந்தய பக்கம்

நில அளவைத் துறையில் பணி: 476 பேருக்கு நியமன ஆணை!

10 Dec 2025, 4:08 pm
நில அளவைத் துறையில் பணி: 476 பேருக்கு நியமன ஆணை!
<p><strong>நில அளவைத் துறையில் பணி: 476 பேருக்கு நியமன ஆணை!</strong></p> <p>சென்னை, டிச. 10 - நில அளவைத் துறையில் 476 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், புதன்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வில், நில &nbsp;அளவைப் பதிவேடுகள் துறையில் 376 நில அள வர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங் களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 10 பேருக்கு &nbsp;நேரடியாக பணி நியமன ஆணைகளை முதல்வர் &nbsp;வழங்கினார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மு.பெ. சாமிநாதன், &nbsp;அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் நா. முரு கானந்தம், துறையின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த 4 ஆண்டுகளில் 800 நில அளவர்களும், 302 வரைவாளர்களும் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, சேந்தமங்கலம், பந்தலூர், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 13.97 கோடி ரூபாய் செலவில் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவில் கட்டப்பட்ட 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களையும் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். 7 &nbsp;மாவட்டங்களில் 332 கோடியே 46 லட்சம் ரூபாய் &nbsp;மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram