தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகளிர் அலை திமுகவுக்கு சாதகம் நாமக்கல் வேட்பாளர் ராணி நம்பிக்கை

8 Apr 2026, 5:30 am
மகளிர் அலை திமுகவுக்கு சாதகம் நாமக்கல் வேட்பாளர் ராணி நம்பிக்கை

மகளிர் அலை திமுகவுக்கு சாதகம் நாமக்கல் வேட்பாளர் ராணி நம்பிக்கை

நாமக்கல், ஏப். 8- நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தத் தேர்தலில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவாகப் பதவியேற்பேன் என திமுக வேட்பாளர் ராணி உறுதியாகத் தெரிவித்தார்.

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ராணி, இன்று தனது தொகுதியில் உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு சேகரிப்பின் போது அவர் பேசுகையில், "நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் முதல் முறையாக பெண் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பை கட்சி வழங்கியுள்ளது. இது பெண் வாக்காளர்களின் மத்தியில் ஒரு தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

நான் வெற்றி பெற்றால், பஞ்சாயத்துத் தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து நன்கு அறிந்துள்ளேன். வெற்றி பெற்றால் குடிநீர், சாலை, கழிவுநீர் வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவேன். மேலும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன்" என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.