மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரிக்கை நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை! பெண்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
20 Jul 2026, 9:54 pm

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரிக்கை நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை! பெண்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை, ஜூலை 20 - மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எவ்வித நிபந்தனையுமின்றி நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி, புதன்கிழமை (ஜூலை 220 ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று மாதர் அமைப்புகள் அறிவித்துள்ளன. மகளிர் இடஒதுக்கீட்டுக்கான தேசியப் பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்துப் பெண்கள் கூட்ட மைப்பு சார்பில் திங்கட்கிழமை (ஜூலை 20) சென்னை யில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

நடப்புத் தொடரிலேயே மகளிர் இடஒதுக்கீடு!

அப்போது பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா, “மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, கடந்த முறை நிபந்தனைகளோடு கொண்டு வரப்பட்டதால் அது முழுப் பலனைத் தரவில்லை. இந்நிலையில், தற்போது தொடங்கியுள்ள நாடாளு மன்ற கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா வுடன் ‘தொகுதி மறுவரையறை’ மற்றும் ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு’ ஆகியவற்றை இணைக்கக் கூடாது. அவற்றைத் தவிர்த்து, புதிய திருத்தங்களுடன் கூடிய மசோதாவைக் கொண்டுவந்து நடப்புச் கூட்டத்தொட ரிலேயே சட்டமாக்க வேண்டும் என்பது பெண்கள் அமைப்புக்களின் கோரிக்கையாகும்.

சட்டமன்றத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும்!

மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற வுள்ளதால், அத்தேர்தலிலேயே மகளிருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என விரும்பு கிறோம். இதனை வலியுறுத்தி புதன்கிழமை (ஜூலை 22) ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இடஒதுக்கீடு விஷயத்தில், பெண்கள் அமைப்புக்களின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் குரலாக எழுப்புமாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஐயுஎம்எல் பொதுச்செய லாளர் அபூபக்கர், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டி யன் உள்ளிட்டோரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளோம். இது தொடர்பாகத் தமிழக முதல மைச்சரைச் சந்தித்து, சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தவுள்ளோம்.” இவ்வாறு அ. ராதிகா கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொருளாளர் ஜி. ராணி, இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலத் தலைவர் மஞ்சுளா, தமிழகப் பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் ரமணி, இந்தியக் கிறிஸ்தவப் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ஜாக்கு லின், ‘மனிதி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசுமதி, சுயாட்சி இயக்க நிர்வாகி மேரி லில்லிபாய் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.