தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகளிர் இட ஒதுக்கீடு : மக்கள் தொகை கணக்கெடுப்பு நிபந்தனையை நீக்கக் கோரி மகளிர் அமைப்புகள் தீவிரம்

13 Jul 2026, 9:17 pm
மகளிர் இட ஒதுக்கீடு : மக்கள் தொகை கணக்கெடுப்பு நிபந்தனையை நீக்கக் கோரி மகளிர் அமைப்புகள் தீவிரம்
<p><strong>மகளிர் இட ஒதுக்கீடு : மக்கள் தொகை கணக்கெடுப்பு நிபந்தனையை நீக்கக் கோரி மகளிர் அமைப்புகள் தீவிரம்</strong></p><p>மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் இணைக்காமல், உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பீகாரைச் சேர்ந்த அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் மகளிர் அமைப்புகளின் கூட்டமைப்பு அரசியல் தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறது. ஜூலை 11 அன்று மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு, பீகாரின் ‘மகாகத்பந்தன்’ கூட்டணியைச் சேர்ந்த ஆர்ஜேடி மாநிலத் தலைவர் மங்கனிலால் மண்டல், சிபிஐ-எம்எல் மாநிலச் செயலாளர் குணால், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கைகளை விளக்கின. அதே போல ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக்கை (ஜூலை 11) மகளிர் அமைப்பு பிரதிநிதிகளின் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், இந்த நியாயமான கோரிக்கைக்குத் தனது கட்சியான பிஜு ஜனதா தளம் முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.