முந்தய பக்கம்

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்! - முதலமைச்சர் வாக்குறுதி!

13 Feb 2026, 9:40 am
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்! -  முதலமைச்சர் வாக்குறுதி!

திமுக-வின் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக் கொண்டது நமது Dravidian Model அரசு! வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
Dravidian Model 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram