தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமூக உருவாக்கத்திற்கும் மாற்றத்திற்கும் சமர்புரியும் பெண்கள்! - அ.வசந்தி

7 Mar 2026, 2:36 pm
சமூக உருவாக்கத்திற்கும் மாற்றத்திற்கும் சமர்புரியும் பெண்கள்! - அ.வசந்தி

சமூக உருவாக்கத்திற்கும் மாற்றத்திற்கும் சமர்புரியும் பெண்கள்! - அ.வசந்தி

பாலின அசமத்துவம், சுரண்டல் மற்றும் வன்முறையற்ற வாழ்க்கைக்கான போராட் டத்தை வலியுறுத்துவதே சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தின் அடிப்படை நோக்கமா கும். வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகவும், அரசி யல் உரிமைகளுக்காகவும் பெண்கள் நடத்திய போராட்டத்தின் வெளிப்பாடாகவே மார்ச்-8 உருவெடுத்தது. 1910-இல் ஜெர்மன் புரட்சியாளர் கிளாரா ஜெட்கின் முன்மொழிந்த இந்தத் தினம், இன்று உலகெங்கும் உழைக்கும் பெண்களின் உரிமை முழக்கமாக ஒலிக்கிறது.

மோடி ஆட்சியில்  பெண்களின் அவல நிலை ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதர வுக் கொள்கையினால் தொழிலாளி வர்க்கத் தின் நலன்கள் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பெண் தொழி லாளர்கள் பாலின மற்றும் வர்க்கச் சுரண்டல் எனும் ‘இரட்டைத் தாக்குதலை’ எதிர்கொண்டு வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை, பணியிடப் பாதுகாப்பின்மை மற்றும் சம ஊதியமின்மை ஆகியவை பெண்கள் மீதானத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த 11 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெண்களை வெறும் ‘போகப் பொருளாகப்’ பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது.

ஒரு புறம் நவபாசிசக் கொள்கைகள், மறுபுறம் மனுஸ்மிருதி சித்தாந்தம் எனப் பெண்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. உயர்சாதியின ரின் பானையைத் தொட்டதற்காக தலித் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதும், ஒடுக்கப் பட்டப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன் முறைகளும் நாட்டின் பல பகுதிகளில் தொடர் கதையாகி வருகின்றன. சாதிய, மத ரீதியான அணி திரட்டலை  வளர்ப்பதன் மூலம் மனிதா பிமானமற்றச் சித்ரவதைகளை இந்த ஆட்சி நியாயப்படுத்துகிறது.

சட்டங்களின் பெயரால்  நடக்கும் சுரண்டல் பெண் சமத்துவத்தைப் பேணுவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யும் மோடி அரசு, நான்கு புதிய ‘தொழிலாளர் சட்டத் தொகுப்பு கள்’ (Labour Codes) மூலம் பெண்களைப் பல வழிகளில் சுரண்ட வழிவகை செய்துள் ளது. இரவுப் பணி மற்றும் சுரங்கப் பணிக ளில் பெண்களை ஈடுபடுத்துவது, வேலை நேரத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கை கள் பெண்களின் கண்ணியமான வாழ்க்கை க்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. மறுபுறம், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பரப்பும் பிற்போக்குத்தனமான கருத்துகள், சமூக வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை  மதிப்பிழக்கச் செய்கின்றன. ‘பாரம்பரியம்’ என்ற பெயரில் ஆணாதிக்கக் கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, பெண்களைச் சமூக நீதியிலி ருந்து விலக்கி வைக்க முயல்கின்றனர். பொருளாதார அசமத்துவமும் உழைப்பின் மதிப்பும் பொருளாதார ரீதியாக இந்தியப் பெண்கள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

தேசிய அளவிலானக் கணக்கீட்டில் 50 சதவீதப் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள் ளனர். ‘வளர்ச்சி’ என வாய்ஜாலம் பேசும் அரசு, பெண்களின் ஊட்டச்சத்திலும் வாழ்வா தாரத்திலும் அக்கறை காட்டுவதில்லை. நவீன தொழில்நுட்பத் துறைகளான ஐடி, மருத்துவம், ஆட்டோமொபைல் மற்றும் ஏஐ (AI) முதல், முதுகெலும்பாகத் திகழும் விவசாயம், கட்டுமானம், பீடி, தீப்பெட்டித் தொழில் வரை பெண்களின் பங்களிப்பு அளப் பரியது. அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவுத் திட்டம் மற்றும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற திட்டப் பணிகளில் முழுமையாகப் பெண்களே உழைக்கின்றனர்.  தோழர் லெனின் கூறியது போல, பிசுக்கு பிடித்த வீட்டு வேலையிலிருந்து பெண்களைப் பிரித்துச் சமூக உற்பத்தியில் ஈடுபடுத்துவதே உண்மையான சுதந்திரமாகும். ஆனால், இந்தச் சமூகத்தை உருவாக்குவதில் ஆண்க ளுக்கு நிகராகச் செயல்படும் பெண்களின் உழைப்பு இன்றும் மதிப்பீடு செய்யப்படு வதில்லை.

உரத்து முழங்குவோம்! சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமான 2026 மார்ச் 8 அன்று கீழ்க்கண்ட கோரிக்கை களை முன்வைத்து நாம் வீதியில் இறங்கு வோம்: l அனைவருக்கும் வேலை மற்றும் குறைந்த பட்ச சம ஊதியத்தை உறுதி செய்! l ஆறு மாத மகப்பேறு விடுப்பு, குழந்தை காப்ப கம் மற்றும் மாதவிடாய் விடுப்பைச் சட்டமாக்கு! l பணியிடங்களில் தனி ஓய்வறைகள் மற்றும் கழிப்பறை வசதிகளை அமைத்திடு! l திட்டப் பணியாளர்களைத் தொழிலா ளர்களாக அங்கீகரித்து ஊதியத்தை உயர்த்து! l ‘POSH’ சட்டத்தைக் கடுமையாக அமல் படுத்தி, அனைத்து நிறுவனங்களிலும் உள் கமிட்டி (ICC) அமைத்திடு! l பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கு! l நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு களை உடனடியாகத் திரும்பப் பெறு! மடைமாற்றங்களைத் தகர்ப்போம்! சர்வதேச மகளிர் தினத்தை வெறும் வாழ்த்துப் பரிமாற்றமாகவோ, அழகிப் போட்டி கள் மற்றும் சமையல் போட்டிகள் நடத்தும் நாளாகவோ மடைமாற்றம் செய்ய முதலா ளித்துவம் முயல்கிறது. சலுகைகளை வாரி  வீசி உரிமைகளை மறைக்கும் இந்தத் தந்தி ரத்தை நாம் முறியடிக்க வேண்டும்.

இது தியா கங்களைப் போற்றும் நாள்; உரிமைக ளுக்காகக் களமாடும் நாள். சோசலிசச் சமூக மாற்றமே பெண்ணடிமைத்தனத்திலிருந்து முழுமையான விடுதலையைத் தரும். அதை நோக்கியப் போராட்டப் பாதையைத் தீவிரப்படுத்துவோம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.