தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகளிர் அலை திமுகவுக்கு சாதகம் நாமக்கல் வேட்பாளர் ராணி நம்பிக்கை

8 Apr 2026, 5:30 am
மகளிர் அலை திமுகவுக்கு சாதகம் நாமக்கல் வேட்பாளர் ராணி நம்பிக்கை

மகளிர் அலை திமுகவுக்கு சாதகம் நாமக்கல் வேட்பாளர் ராணி நம்பிக்கை

நாமக்கல், ஏப். 7- நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி, தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், "நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் முதல் முறையாக பெண் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை கட்சி வழங்கியுள்ளது. இது பெண்களின் அரசியல் முன்னேற்றத்திற்கு முக்கியமான கட்டமாகும். நான் ஊராட்சி கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். அதனை மகளிர் அடிப்படை பிரச்சனைகள் குறித்து நன்கு அறிந்துள்ளேன்.

வெற்றி பெற்றால் குடிநீர், சாலை, கழிவுநீர் வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பேன்" என்றார். மேலும், பெண்கள் திமுகவுக்கு வலுவான ஆதரவாக உள்ளனர். எதிர்க்கட்சிகள் விமர்சனங்களையே முன்வைத்து வருகின்றன.

திமுக அரசு சாதனைகளை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் மகளிர் அலை திமுகவுக்கு சாதகமாக அமையும். அதனால் குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நாமக்கல் தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவாக பதவியேற்பேன்" என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.