மகளிர் உரிமைத் தொகை முதலமைச்சருக்கு பெண்கள் இனிப்பு வழங்கி நன்றி
14 Feb 2026, 4:33 pm
<p><strong>மகளிர் உரிமைத் தொகை முதலமைச்சருக்கு பெண்கள் இனிப்பு வழங்கி நன்றி</strong></p>
<p>சென்னை,பிப்.14- 2026 பிப்ரவரி 14 அன்று திருப்பத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காகச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு மக்கள் நலத்திட்டங் களின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். மகளிர் நெகிழ்ச்சி சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு ரயில் மார்க்கமாக செல்ல ,சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தபோது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நேற்று 5,000 ரூபாய் வழங்கப்பட்டதற்காகப் பெருந்திரளான பெண்கள் முதலமைச் சருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, ஜோலார்பேட்டை செல்லும் வழியில் தாமலேரிமுத்தூரைச் சேர்ந்த மேகலா என்பவரது வீட்டிற்குச் சென்ற முதல மைச்சர், அவரிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்துக் கேட்டறிந்தார். உரிமைத் தொகை தனது குழந்தைகளின் கல்விச் செலவிற்குப் பயன்படுவதாகவும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் மற்றும் மடிக்கணினி திட்டத்தால் தனது மகன்கள் பயனடைந்துள்ளதாகவும் மேகலா தெரிவித்தார். உரிமைத் தொகை உயர்வு திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப் படும் என்ற அறிவிப்பிற்கு, வழியில் திரண்டி ருந்த பெண்கள் இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட னர். விளையாட்டு வளாக ஆய்வு திருப்பத்தூரில் 10 ஏக்கர் பரப்பளவில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம், நீச்சல் குளம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு வளாகப் பணிகளை முதல மைச்சர் ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.</p>
