மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் கிடைக்க...
9 Apr 2026, 5:30 am

மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் கிடைக்க...

தருமபுரி, ஏப்.9- மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் கிடைக்க, திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அரூர் தொகுதி வேட்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அ.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் பேசுகையில், திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எண்ணற்ற சாதனைகளை தமிழக முதல்வர் செய்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், மகளிர் உரிமைத் தொகை ரூ.2000, மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.3000 மதிப்பில் காப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.

நரிப்பள்ளி, கோட்டப்பட்டி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவை தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.