தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் மாதர் அமைப்பினர் கைது!

22 Jul 2026, 9:20 pm
33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் மாதர் அமைப்பினர் கைது!

33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

சென்னையில் மாதர் அமைப்பினர் கைது!

பெண்களுக்கு எதிரானதே மனுவாத பாஜக! உ. வாசுகி சாடல்

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தின் போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ. வாசுகி

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, “2014-இல் மகளிர் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதியாக கூறியது. 2019-இல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பாஜகவுக்கு இருந்தும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றவில்லை. 2023ஆம் ஆண்டு மகளிர் மசோதாவை, தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு நிபந்தனைகளோடு கொண்டு வந்தனர். மகளிர் மசோதாவை ஆதரித்த இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், நிபந்தனையை எதிர்த்தனர்.

ஆனால், அந்த நிபந்தனையை பாஜக கைவிட மறுக்கிறது. ‘மனு’வாதத்தை அடிப்படையாக கொண்ட பாஜக, முறையாக மசோதாவை கொண்டு வராது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், ‘மனு’வாதத்திற்கு எதிராகவும், ஆணாதிக்க அதிகார படிநிலையை கேள்விக்கு உள்ளாக்குகிற வகையில் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம். நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் இணைந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்த போராட்டம் நடைபெறுகிறது” என்று வாசுகி குறிப்பிட்டார்.

சென்னை, ஜூலை 22 - மகளிர்க்கான 33 சத விகித இடஒதுக்கீட்டு மசோ தாவை, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறை வேற்ற வலியுறுத்தி புத னன்று (ஜூலை 22) ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற பெண்கள் கூட்ட மைப்பினரைக் காவல்துறை யினர் கைது செய்தனர்.

நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, மோடி அரசானது தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய நிபந்தனைகளோடு, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது. இதனால் அந்த மசோதா போதிய ஆதரவின்றி தோல்விய டைந்தது. எனவே, தற்போது நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிபந்தனைகளின்றி தாக்கல் செய்து நிறை வேற்ற வேண்டும் என வலி யுறுத்தி ஜனவரி 20 முதல் மகளிர் இட ஒதுக்கீட்டுக் கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு போராட்டங் களை நடத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக மகளிர் இடஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் கூட்ட மைப்பு மற்றும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இணைந்து, ஆளுநர் மாளிகை முற்றுகைப் போரா ட்டத்தை அறிவித்திருந்தது.

அதன்படி, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத் தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி தலை மையில், சென்னை சைதாப் பேட்டை சின்னமலை அரு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.