பெண்கள் அமைப்புக்களின் கூட்டமைப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி.யிடம் மனு அளிப்பு
11 Aug 2026, 9:29 pm
<p><strong>பெண்கள் அமைப்புக்களின் கூட்டமைப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி.யிடம் மனு அளிப்பு</strong></p><p>புதுதில்லி, ஆக. 11-சட்டமன்றம் மற்றும் நாடாளுமன் றங்களில், மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை மக்கள் தொகை கணக்கெடுப்புமற்றும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட எதனோடும் தொடர்பு படுத்தாமல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அனைத்து பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பான மகளிர் இடஒதுக்கீட்டுக்கான தேசிய கூட்டமைப்பினர் (NATIONAL COALITION FOR WOMEN’S RESERVATION - NCWR), தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><p>இந்தப் போராட்டத்தை, சுதந்திர தினத்தைக் காரணமாகக் காட்டி, ஒன்றிய பாஜக அரசு தற்போது தடுத்துள்ளது. இந்நிலையில், பெண்கள் அமைப்புக்களின் கூட்டமைப்பினர், தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக,நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து முறையிட்டு வருகின்றனர். அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தத்தை தில்லியில் சந்தித்துமுறையீட்டை அளித்தனர்.</p>
