33% மகளிர் இடஒதுக்கீடு நிபந்தனையின்றி அமலாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புக! தமிழக அரசியல் தலைவர்களிடம் மாதர் அமைப்புக்கள் வலியுறுத்தல்
17 Jul 2026, 9:35 pm
<p><strong>33% மகளிர் இடஒதுக்கீடு நிபந்தனையின்றி அமலாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புக! தமிழக அரசியல் தலைவர்களிடம் மாதர் அமைப்புக்கள் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூலை 17 - தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற எந்தவொரு நிபந்தனையுமின்றி மகளிர்க்கான 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக அமலா வதற்கு, ஜூலை 20 அன்று கூடும் நாடாளு மன்றக் கூட்டத்தொடரில், அனைத்துக் கட்சி களும் வலுவாகக் குரல் எழுப்ப வேண்டும் என்று மாதர் அமைப்புகளின் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை முன்வைத்து, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் மு. வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் அபுபக்கர் ஆகியோரை மாதர் அமைப்பு களின் நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்த இந்த பிரதிநிதிகள் குழுவில், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி, மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச் செயலாளர் அ. ராதிகா, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW) மாநிலத் தலைவர் மஞ்சுளா, மாநிலப் பொதுச் செய லாளர் கண்ணகி, துணைத் தலைவர் டாக்டர் ஆர். சாந்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்க (AIPWA) ஒருங்கிணைப்பா ளர் பிலோமினா, ‘மனிதி’ அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் வசுமதி, தமிழ்நாடு பெண்கள் அமைப்பின் நிர்வாகி ரமணி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.</p>
