தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல்

4 Nov 2026, 10:48 pm
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல்

சிவகங்கை, நவ.4-சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூர் தாலுகா திருக்கலாப்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடவலியுறுத்தி, கிராம மக்கள் மற் றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருக்கலாப்பட்டி டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஏற்கெனவே பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது, கடையை மூடுவதாகஅதிகாரிகள் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததால், மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள், திருப்பத்தூர் வட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ரோகிணி, மாவட் டப் பொருளாளர் சாந்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேவகபெருமாள், மாவட்டத் தலைவர் சத்தியசீலன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரெ.மோகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், தாலுகா செய

லாளர் முருகேசன், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில், இன்னும் 10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடை மூடப் படும் என்று அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் கலைந்து சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.