முந்தய பக்கம்

100 நாள் வேலை வழங்கக் கோரி வந்தவாசியில் பெண்கள் சாலை மறியல்

5 Dec 2025, 4:21 pm
100 நாள் வேலை வழங்கக் கோரி வந்தவாசியில் பெண்கள் சாலை மறியல்
<p><strong>100 நாள் வேலை வழங்கக் கோரி வந்தவாசியில் பெண்கள் சாலை மறியல்</strong></p> <p>திருவண்ணாமலை, டிச.5- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அடுத்த காவணியாத்தூர் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்குப் பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில், வந்தவாசி - மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் காவணியாத்தூரைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையி னர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அலு வலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில், வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் வந்தவாசி - மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram