ஆண்களின் போதை… பெண்களின் வாதை!
10 Jul 2026, 9:28 pm

ஆண்களின் போதை… பெண்களின் வாதை!

ஒரு காலத்தில் மது அருந்து வது என்பது அவமானகரமான செயலாக பார்க்கப்பட்டது. மதுக் கடை பக்கம் ஒதுங்குபவர்கள் கூட, யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற கூச்சத்தில் தலையில் துண் டைப்போட்டு சென்ற காலங்கள் உண்டு. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ்! மது என்பது ஏதோ அந் தஸ்தின் அடையாளம் போலவும், கௌரவப் பண்டம் போலவும் மாற்றப் பட்டிருப்பதுதான் வெட்கக்கேடு. திறந்த வெளியிலேயே கூச்சமில்லா மல் குடித்துவிட்டுத் தள்ளாடுவதும், கலாச்சாரச் சீர்கேட்டை ஊற்றுக் கண்ணாய் பெருக்குவதும் அன்றா டக் காட்சிகளாக மாறிவிட்டன.

குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் ஒரு குடும்பத் தலைவன் மதுவுக்கு அடிமையாகி விட்டால், அந்த ஒட்டுமொத்த குடும் பமுமே நடுத்தெருவுக்கு வந்து விடும் அவலம் இன்றும் தொடர்கி றது. பொருளாதார ரீதியாக தனித்து நிற்கும் சில பெண்களைத் தவிர, நமது தமிழ் சமூகத்தில் இன்னமும் பெரும்பாலான குடும்பங்கள் ஆண்க ளின் வருவாயையே நம்பியிருக் கின்றன. அப்படியிருக்க, மது அரக்க னால் ஆண்களின் உழைப்பும், சிந்த னையும் சீரழியும் போது, அதன் ஒட்டு மொத்தப் பாதிப்பையும், வலியை யும் சுமப்பது வீட்டின் பெண்கள்தான். அதனால்தான், தமிழகம் முழுவ தும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் ஆவேசமாக போர்க் கொடி தூக்கி வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு நியாயமான போராட்டக்களமும், அதையொட்டி அரங்கேறிய அதிர்ச்சியூட்டும் சம்ப வமும்தான் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நடை பெற்றுள்ளது. மேட்டுப்பாளையத்தை அடுத்த தோலம்பாளையம் புதூர் கிராமத் தில் அரசு டாஸ்மாக் (கடை எண்: 2252) செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைக்கு வரும் குடிகாரர்க ளால் இப்பகுதியில் தினமும் சண்டை சச்சரவுகளும், ஆபாசப் பேச்சுகளும் வாடிக்கையாகிவிட்டன. இதனால், பெண்கள், குழந்தைகள் என எவரும் நிம்மதியாக நடமாடவே இயலாத ஒரு நரகச்சூழல் உருவாகியுள்ளது. இதற்கு விடிவு காண வேண்டி, வியாழனன்று அக்கடையை சுற்றி யுள்ள எம்.ஜி.ஆர் நகர், ரங்கா நகர், ஜெ.ஜெநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். ”எங்கள் வாழ்வாதா ரத்தை சீரழிக்கும் மதுக்கடை எங்க ளுக்கு வேண்டாம்” என முழக்க மிட்டு, அக்கடையை முற்றுகையிட்ட னர். கடையை திறக்கவிடமாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந் னர். பெண்களின் இந்த போராட்டம் ஒட்டுமொத்த கிராமத்தின் அமைதிக் கானது. ஆனால், அங்கிருந்த மதுப் பிரியர்களோ குடிக்க முடியாத ஆத்தி ரத்தில், போராடிய பெண்களுடன் நேருக்கு நேர் மோதத் தொடங்கினர். ”கடையை ஏன் மூடுகிறீர்கள்? கடை யைத் திறந்தே தீர வேண்டும்” என்று ஆண்கள் தரப்பு ஆவேசமாக வாதிட் டது.

பெண்கள் கடையை மூடச் சொல்லிப் போராட... அதற்கு போட் டியாக, ஆண்கள் கடையை திறக்கச் சொல்லி அதே இடத்தில் திரண்ட காட்சி காண்போரை கண் கலங்க வும், அதிர்ச்சியடையவும் வைத்தது. மதுப்பழக்கம் ஒரு மனிதனை எந்த எல்லைக்கு கொண்டு செல்லும், அவனது விவேகத்தை எப்படி மழுங் கடிக்கும் என்பதற்கு இந்த வாக்கு வாதமே நேரடி உதாரணம்! நிலை மையை சமாளிக்க முடியாமல் அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையி னரே திணறிப் போயினர்.

அதிகாரிகளின் சமாதானமும் பெண்களின் குமுறலும்

”ஏற்கனவே இதுபோல நாங்கள் போராட்டம் நடத்தியபோது, விரை வில் மதுக்கடை மூடப்படும் என்று அதிகாரிகள் வெற்று வாக்குறுதி கொடுத்து எங்களை ஏமாற்றினர். ஆனால், கடையை அகற்றவில்லை. அதனால்தான் மீண்டும் வீதிக்கு வந்து போராடுகிறோம்” என்று பெண்கள் தரப்பில் கண்ணீரோடு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பிரச்சனை நீண்ட நேரம் நீடித் ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கலால்துறை மேற்பார்வையா ளர் லாரன்ஸ் போராட்டத்தில் ஈடு பட்ட பெண்களுடன் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, ”இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய உங்களின் விண்ணப்பம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றுள்ளது. தற்போது இது மேலி டத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு தீவிர பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் இப்பிரச்சனைக்கு உறுதி யான தீர்வு காணப்படும்” என்று உறுதியளித்தார். அதிகாரியின் இந்த உறுதிமொழியை ஏற்று, கடையை மூட வலியுறுத்தி முற்றுகையிட்ட பெண்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

விடை தெரியா கேள்வி:

மதுக்கடையை மூட வேண்டும் என்று பெண்களும், திறக்க வேண் டும் என்று ஆண்களும் ஒரே இடத்தில் திரண்ட சம்பவம் சமூக ஆர்வலர்களி டையே பெரும் கவலையை ஏற்ப டுத்தியுள்ளது. பெண்களின் கண்ணீ ருக்கும், குமுறலுக்கும் மதிப்பளித்து இந்த நச்சுப்பாட்டில்கள் வீசியெ றியப்படுமா? அல்லது மதுப்பிரியர் களின் கூச்சலுக்கு பணிந்து இந்த துயரம் தொடருமா? தோலம்பாளை யம் புதூர் கிராமத்து பெண்களின் கண்ணீரை துடைக்க வேண்டிய பொறுப்பு இப்போது அரசின் கைக ளில் உள்ளது! (நநி)