தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் 10 மடங்கு மூடல் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கவலை

20 Aug 2026, 10:04 pm
பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் 10 மடங்கு மூடல் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கவலை

பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் 10 மடங்கு மூடல்

டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கவலை

உதயாம் (Udyam) பதிவு அதிகரித்துள்ளதாகக் கூறிக்கொள்ளும் ஒன்றிய அரசு, பெண்கள் நடத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொடர் மூடல் மற்றும் சரிவைத் தடுக்கத் தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

976 சதவீதம் அதிகரித்த நிறுவனங்கள் மூடல்

சிவதாசனின் கேள்விக்கு ஒன்றிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை இணை அமைச்சர் சோபா கரந்த்லாஜே அளித்த பதிலின்படி, பெண்களுக்கே சொந்தமான சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களின் மூடல் கடந்த ஐந்து ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. 2021-22 இல் 361 ஆக இருந்த மூடல் எண்ணிக்கை, 2025-26 இல் 3,884 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் 8,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியுள்ளன.

காரணம் கண்டறியாத அரசு

நிறுவனங்கள் ஏன் மூடப்படுகின்றன என்பது குறித்து ஒன்றிய அரசு எந்தவொரு முறையான ஆய்வும் செய்யவில்லை. மூலப்பொருள் செலவு உயர்வு, ஜிஎஸ்டி

சுமை, சந்தை அணுகல் தடைகள் மற்றும் கடனுதவி இல்லாமை போன்ற காரணங்களால் சிறு நிறுவனங்கள் அழிகின்றன. எனவே, பெண்களின் தொழில்முனைவுத் திறனைப் பாதுகாக்க சிறப்பு மறுவாழ்வுத் தொகுப்பு மற்றும் தேசிய கொள்கையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சிவதாசன் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.