அபாயகரமான பணிகளில் பெண்களா? அறிவிப்பாணையைத் திரும்பப் பெறுக!
28 Nov 2025, 2:28 pm

அபாயகரமான பணிகளில் பெண்களா? அறிவிப்பாணையைத் திரும்பப் பெறுக!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் சென்னை, நவ. 28 - அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளர்களை அனுமதிக்கும் வரைவுச் சட்டத் திருத்த அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: போராட்டத்திற்கு ஆதரவு! அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளர்களை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள வரைவுச் சட்டத் திருத்த அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, உழைக்கும் பெண்கள் இயக்கங் களின் சார்பில் சனிக்கிழமை (நவ. 29) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

உழைக்கும் பெண்களின் நியாயமான இந்த கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. 75 ஆண்டு தடையை நீக்குவதா? ஆபத்தான தொழில்களான மின்னாற் பகுப்பு, கண்ணாடி உற்பத்தி, ஈயத் தொழில்கள், வாயு மற்றும் பெட்ரோலியம் உற்பத்தி, சாய உற்பத்தி, பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற் சாலைகளில் ரசாயனங்களைக் கலக்கும் வேலை, பூச்சிக்கொல்லிகள் மற்றும் உர உற்பத்தி போன்ற 20 தொழில்களில் பெண்கள் ஈடுபட தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டம் கடந்த 75 ஆண்டுகளாக தடை விதித்துள்ளது. புற்றுநோய் அபாயம்! இந்த தொழில்களினால் பெண் உழைப்பா ளிகளுக்கு பல்வேறு விதமான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இரத்தப் புற்றுநோய், சிறுநீரகம் சேதம், கருப்பைப் புற்றுநோய், குழந்தைகளின் பிறவிக் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைவு உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களுக்கு பெண்கள் பலியாகும் அபாயம் உள்ளது. ஆலோசனை நடத்தாதது ஏன்? இந்நிலையில், தொழிற்சங்கங்களிடம் எவ்வித கலந்தாலோசனையும் மேற்கொள்ளா மல், தமிழக அரசு மேற்கண்ட அபாயகர மான தொழில்களில் பெண் தொழிலாளர்களை அனுமதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஆலோசனை எவ்விதத்திலும் ஏற்கத்தக்க தல்ல.

இது உழைக்கும் பெண்களுக்கு பேராபத் தாக அமையும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. பெண்களுக்கு பேராபத்து! எனவே, தமிழக உழைக்கும் பெண்களின் உணர்வை கருத்தில் கொண்டு தடை விதிக்கப் பட்டிருந்த 20 அபாயகரமான தொழில்களில் பெண்களை ஈடுபடுத்தும் வரைவு அறிவிப்பா ணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது. தொழிலாளர்கள் தொடர்பான முக்கியத் திருத்தங்களை அரசு மேற்கொள்வதற்கு முன்பாக தொழிற்சங்கங்களின் கருத்துக்களை அறிந்து ஜனநாயகப் பூர்வமாக முடிவெடுக்கும் அணுகுமுறையை தமிழ்நாடு அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.