கன்னியாகுமரி மாவட்ட அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>கன்னியாகுமரி மாவட்ட அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்</strong></p>
<p>நாகர்கோவில். பிப் .18 குமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகளின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். புன்முறுவலுடன் டிக்கெட் வழங்கி, கனிவான சொற்களால் பேசும் அவர்கள் சேவை பாராட்டு தலுக்குரியது.ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இடத்தின் பெயரை தெளிவாகச் சொல்லி பயணி களை இறக்கிவிடும் பொறுப்புணர்வு குறிப்பிடத்தக்கது. முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரிடமும் நட்பாக பழகும் விதம் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. பாதுகாப்பும், மரியாதையும் கலந்த சேவை மூலம் பொதுப் போக்குவரத்தில் மனிதநேயத்தின் அழகை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p>
