புதுச்சேரியில் சிபிஎம் வேட்பார்களுக்கு பெண்கள் தீவிரப்பிரச்சாரம்
5 Apr 2026, 6:26 pm
<p><strong>புதுச்சேரியில் சிபிஎம் வேட்பார்களுக்கு பெண்கள் தீவிரப்பிரச்சாரம்</strong></p>
<p>புதுச்சேரி, ஏப்.5- அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு பெண்கள் தீவிர வாக்கு சேகரித்தனர். புதுச்சேரி திருபுவனை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தட்சிணாமூர்த்திக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. பெண்களின் பாதுகாப்புக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருபுவனை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தட்சிணாமூர்த்திக்கு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வீதி வீதியாக மக்களை சந்தித்து வாக்காளர்களை கேட்டுக் கொண்ட னர். முன்னதாக பிரச்சாரத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் இளவரசி தலைமை தாங்கினார். மாதர் சங்க நிர்வாகிகள் பூமா, சங்கரி,பரிமளா உள்ளிட்ட திரளான பெண்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.</p>
