சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆதரவாக பெண்கள் வாக்குச்சேகரிப்பு
12 Apr 2026, 5:30 am

சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆதரவாக பெண்கள் வாக்குச்சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமியை ஆதரித்து சனிக்கிழமையன்று செருக்கோல் ஊராட்சியில் திமுக மகளிர் அணியின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் சார்பில் வாக்குச்சேகரிப்பு நடைபெற்றது.

இதனை திமுக குமரி மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மனோ தங்கராஜ் துவக்கிவைத்துப் பங்கேற்றார். பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திருவட்டார், ஆற்றூர், பேரூராட்சிகள் மற்றும் ஏற்றக்கோடி, குமரன்குடி ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி ஏப்ரல் 11 சனிக்கிழமையன்று மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்தார். கூட்டணிக்கட்சியினரும் பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.