மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
6 Jun 2026, 10:58 pm
<p><strong>மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பூர், ஜூன் 6 - மோடி அரசின் தவறான கொள்கை காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஊத்துக்குளியில் சனி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்குளி பேருந்து நிறுத்தம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க கிளை நிர்வாகி ஏ.செல்வி தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.பானுமதி, மாவட்ட துணைச்செயலாளர் பா.லட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் கு.சரஸ்வதி, தாலுகா செயலாளர் பி. வண்ணக்கொடி ஆகியோர் கண்டன உரை ஆற்றி னர். தாலுகா துணைத்தலைவர் எஸ்.லட்சுமி நன்றி கூறினார். முன்னதாக எரிபொருட்கள் விலை உயர் விற்கு காரணமான மோடி அரசை கண்டித்து முழக் கங்களை எழுப்பினர்.</p>
