அரசு பணியாளர் ஏமாற்றிய பணத்தை மீட்டுத்தர ஆட்சியரிடம் பெண்கள் முறையீடு
10 Nov 2025, 5:08 pm
<p><strong>அரசு பணியாளர் ஏமாற்றிய பணத்தை மீட்டுத்தர ஆட்சியரிடம் பெண்கள் முறையீடு</strong></p>
<p>விழுப்புரம், நவ.10- சிஎஸ்டி அரசு பணியாளர் ஏமாற்றிய பணத்தை மீட்டுதர ஆட்சி யரிடம் முறையீட்டு முடக்கப்பட்ட தங்கள் தனிநபர் வங்கிக் கணக்கினை செயல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என இருளர் பழங்குடி சமூக குங்குமப் பூ மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மணலப்பாடி மதுரா பூந்த மல்லி பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த குங்குமப் பூ மகளிர் சுய உதவிக் குழுவினர் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்கள் திடீரென, நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து வயிற்றில் அடித்து கொண்டு அழுதனர். உடனடியாக அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சென்று சமா தான பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கு மாறு கூறி அனுப்பி வைத்தனர். எங்கள் பகுதியில் கடந்த 3 வருடங்களாக குங்குமப் பூ இருளர் பெண்கள் சுய உதவிக் குழுவை செயல்படுத்தி வருகி றோம். இக்குழுவில் உள்ள உறுப்பி னர்களுக்கு கடந்த 9.10.2023 அன்று ஆலம்பூண்டி பாரத ஸ்டேட் வங்கி யில் பெருங்கடன் பிஎல்எப் லோன் ரூ.5 லட்சம் மணலப்பாடி பஞ்சாயத்தில் சிஸ்டி அரசு பணி யாளராக செயல்படும் இமாகுலேட் என்பவர் பெற்றுத் தந்தார். ஆனால் பெற்றுத் தந்த இமாகுலேட் அதிலிருந்து 1 லட்ச ரூபாயை சொந்த தேவைக்கு அவர் எடுத்துக்கொண்டார். மீதம் இருந்த நான்கு லட்சத்தை எங்கள் குழு உறுப்பினர் 5 நபர்களுக்கு பிரித்து கொடுத்தார். அதனை ஒரு மாதத்திற்கு 24 ஆயிரம் வீதம் தன்னிடம் கட்டுமாறு எங்களிடம் கூறினார். அதன்படி கடன் பெற்ற உறுப்பினர்கள் கடந்த 5.11.2023 முதல் 5.09.2024 தேதி வரை 11 மாதங்கள் என மொத்தம் 2 லட்த்து52 ஆயிரம் ரூபாயை இமாகுலேட்டிடம் கட்டியுள்ளனர். ஆனால் வங்கி மேலாளர் குழு பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு வாங்கிய கடன் ரூபாய் ஐந்து லட்சம் இதுவரை எதுவும் திருப்பி செலுத்தவில்லை என்ற தகவலைத் தெரிவித்தார். இதேபோன்று கடந்த 10.12.2023 அன்று சிஎஸ்டி இமாகுலேட் மீண்டும் தனது பரிந்துரையின் படி ஆலம்பூண்டி எஸ்பிஐ வங்கியின் மூலம் ரூபாய் 10 லட்சம் நேரடி கடன் பெற்று குழு உறுப்பினர் 12 நபர்களுக்கு பிரித்து கொடுத்தார். அதற்கு மாதந்தோறும் ரூபாய் 60 ஆயிரம் வீதம் செலுத்துமாறு கூறி னார். அதன்படி கடந்த 10.01.2024 முதல் 10.09.2024 வரை ரூபாய் ஐந்து லட்சத்தை இமாகுலேட்டிடம் திருப்பிச் செலுத்தியுள்ளனர். ஆனால் வங்கி மேலாளர் மீண்டும் குழு பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு வாங்கிய கடன் ரூபாய் 10 லட்சத்தை இதுவரை திருப்பி செலுத்தவில்லை என்ற தகவலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிஎஸ்டி இமாகு லேட்டிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது குழு பணத்தை வங்கி யில் செலுத்தாததை ஒப்புக் கொண்டு ஒரு சில மாதங்களில் கட்டி விடுகிறேன் என வாக்குறுதி அளித்தார். அதன் பின்பு அவர் தலைமறைவாகி விட்டார். மக்கள் பணத்தை வங்கியில் செலுத்து வதற்கான எந்தவொரு முயற்சி யும் அவர் எடுக்கவில்லை. தொலை பேசியிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. குழுவின் பெயரில் பணம் எடுத்து நீண்ட நாட்கள் கட்டாததால் குழு உறுப்பி னர்களின் தனிநபர் வங்கிக் கணக்கை முடக்கம் செய்து வங்கி யில் கடனைச் செலுத்துமாறு குழு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் குழு உறுப்பினர்கள் மத்தியில் மனக்கசப்புகளும் குடும்பங்களில் தொடர் பிரச்சனையும் ஏற்படு கின்றன. அரசு வழங்கும் எந்த நலத்திட்டங்களையும் பெற முடி யாமல் சிரமப்படுகின்றோம். கடந்த ஒரு வருடமாக இதையொட்டி குழு உறுப்பினர்கள் எடுக்கின்ற எந்த ஒரு முயற்சிக்கும் ஒத்து ழைப்பு மற்றும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்கவும் உறுப்பினர்கள் கட்டிய பணத்தை வட்டியுடன் சிஎஸ்டி இமாகுலேட் கட்ட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரசு இக்குழுவிற்கு வழங்கப்பட்டு அரசு பணியாளரால் ஏமாற்றப்பட்ட வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.</p>
