முந்தய பக்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

24 Feb 2026, 3:55 pm
பெண்கள் மற்றும் குழந்தைகள்  விழிப்புணர்வுக் கருத்தரங்கு
<p><strong>பெண்கள் மற்றும் குழந்தைகள் &nbsp;விழிப்புணர்வுக் கருத்தரங்கு</strong></p> <p>வேலூர், பிப். 24- வேலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பேசுகையில், &ldquo;வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆண்களை விடப் பெண் வாக்கா ளர்கள் 38 ஆயிரம் பேர் அதிகமாக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1060 பெண்கள் என்ற நிலையில் உள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்புச் சட்டம் (2013) மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டங்கள் குறித்து ஆசிரி யர்களும் பணியாளர்களும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்&rdquo; என்றார். மேலும், கல்வி மற்றும் அதிகாரம் ஒரு பெண்ணுக்கு உண்மையான பாதுகாப்பு என்றும், சிறுவயது திரு மணங்கள் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்றும் குறிப்பிட்ட அவர், பள்ளிக்கு வராத பெண் குழந்தை களைக் கண்காணித்து உடனடியாக சைல்ட் ஹெல்ப்லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் சமூக நல அலுவலர் இரா. உமா, வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram