மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 வரவு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
13 Feb 2026, 5:58 pm
<p><strong>மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 வரவு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்</strong></p>
<p>கோவை, பிப்.13- தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கான தொகையுடன் கூடிய சிறப்புத் தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதை பெண்கள் வரவேற்றுள்ள நிலை யில், திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடு பட்டனர். 3 மாதங்களுக்கான உரிமைத்தொகை ரூ.3000 மற்றும் கோடைகாலச் சலுகையாக வழங்கப்பட்ட கூடுதல் தொகை ரூ.2000 என மொத்தம் ரூ.5000 பயனாளிகளின் வங்கிக்கணக் கில் வெள்ளியன்று காலை வரவு வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் பெண்கள் பெரும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். இது அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆரவாரத்துடன் முதல்வரின் நடவடிக்கையை பெண்கள் வர வேற்றுள்ளனர். இதனை திமுகவினர் இனிப்புகளை கொடுத்து கொண்டாடினர். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, கோவை மாந கர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அன்னம்மாள் தலைமை வகித்தார். கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கும் மகளிருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே திருச் செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.</p>
